'நாச்சியார்' படத்தில் இடம்பெற்ற 'அந்த' வார்த்தை நீக்கப்படும். எஸ்.வி.சேகர்

  • IndiaGlitz, [Friday,November 17 2017]

சமீபத்தில் வெளியான இயக்குனர் பாலாவின் 'நாச்சியார்' படத்தில் ஜோதிகா பேசுவதாக இடம்பெறும் ஒரு வார்த்தை கடந்த இரண்டு நாட்களாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இதுகுறித்து முன்னாள் தணிக்கைக்குழு உறுப்பினரும், நடிகருமான எஸ்.வி.சேகர் கூறியுள்ள கருத்தை தற்போது பார்ப்போம்

சினிமா தியேட்டரில் வெளியாகும் படத்திற்கு மட்டுமே சென்சார் செய்யப்படும். தியேட்டரில் ரிலீஸ் ஆகும் படங்களுக்கு மட்டுமே சென்சார் செய்ய சென்சாருக்கு உரிமை உண்டு. இணையதளங்களில் மட்டும் வெளியாகும் டீசர், டிரைலருக்கு எந்தவித கட்டுப்பாடும் இல்லை

மேலும் பரபரப்புக்காக ஒருசிலர் சர்ச்சைக்குரிய வார்த்தைகளை டீசர், டிரைலரில் பயன்படுத்தப்படுவதுண்டு. இந்த வசனம் அல்லது காட்சி சென்சாருக்கு செல்லும்போது நீக்கப்படும் அல்லது மியூட் செய்யப்படும்' என்று எஸ்.வி.சேகர் கூறியுள்ளார். எனவே 'நாச்சியார்' படத்தில் இடம்பெற்ற 'அந்த' வார்த்தையும் சென்சார் செய்யப்படும்போது நீக்கப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.