அறியாமையா? அகந்தையா? நடிகர் சங்கத்திற்கு எஸ்.வி.சேகர் கேள்வி

  • IndiaGlitz, [Monday,August 20 2018]

நடிகர் சங்கத்தின் 65வது ஆண்டு பொதுகுழு கூட்டம் நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த பொதுக்குழுவில் உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டு பல்வேறு தீர்மானங்களை கொண்டு வந்தனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக ஊடகங்களின் தலைப்பு செய்தியில் இடம்பெற்ற எஸ்.வி.சேகரும் இந்த பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் பேசியபோது, 'நடிகர் சங்க கட்டிடம் கட்டி முடிக்கும் வரை நடிகர் சங்கத்தின் தேர்தலை நடத்தக்கூடாது என்ற முடிவுக்கு தான் எதிர்ப்பு தெரிவிப்பதாகவும், நடிகர் சங்க தேர்தல் முறைப்படி உரிய காலத்தில் நடந்தே தீரவேண்டும் என்றும் கூறினார். மேலும் வரும் நடிகர் சங்க தேர்தலில் தனது தலைமையில் ஒரு புதிய அணி போட்டிட்யிடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த நிலையில் நடிகர் சங்கத்தின் பொதுக்குழுவில் முன்னாள் பிரதமர் வாஜ்பாய் அவர்களுக்கு ஒருநிமிடம் கூட அஞ்சலி செலுத்தாததை தான் கண்டிப்பதாக எஸ்.வி.சேகர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் கருத்து கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது: இன்று நடைபெற்ற நடிகர் சங்க சுய தம்பட்ட பொதுக்கூட்டத்தில் (பொதுக்குழு) மறைந்த பல கலைஞர்களுக்கு,முன்னாள் முதல்வருக்கு, அஞ்சலி செலுத்தியவர்களுக்கு, நாடே 7 நாள் துக்கம் அனுசரிக்கும் வாஜ்பாய் அவர்களுக்கு 1 நிமிடம் அஞ்சலி செலுத்தத் தெரியவில்லை. இது அறியாமையா ⁉️. அகந்தையா என்று கூறியுள்ளார்.

எஸ்.வி.சேகரின் இந்த டுவீட்டுக்கு பல கடுமையான வார்த்தைகளுடன் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.