'பிகில்' விஜய்க்கு ஆதரவு தெரிவித்த பாஜக பிரமுகர்

  • IndiaGlitz, [Tuesday,October 22 2019]

விஜய் படம் என்றாலே பாஜக அல்லது அதிமுகவினர் எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்பது கடந்த கால வரலாறு. மெர்சல் மற்றும் சர்கார் ஆகிய இரண்டு படங்களும் எதிர்ப்புகளால் தான் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் கிடைத்தது என்பதும் குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்.

இந்த நிலையில் யாரும் எதிர்பாராத வகையில் பிகில் விஜய்க்கு பாஜக பிரமுகரும் நடிகருமான எஸ்.வி.சேகர் ஆதரவு தெரிவித்துள்ளார். பிகில் படத்தில் கருப்பு சட்டை, காவி கலர் வேஷ்டி, கழுத்தில் சிலுவை என வித்தியாசமாக வித்தியாசமான காஸ்ட்யூம்களில் விஜய் நடித்துள்ளார் என்பது வெளிவந்து கொண்டிருக்கும் போஸ்டர்களில் இருந்து தெரிகிறது. இந்த நிலையில் பிகில் படத்திற்கு முதல் நாள் முதல் காட்சி 'செல்லும் ரசிகர்கள் இதே உடையில் செல்ல இந்த காஸ்ட்யூம்களை வாங்கி வருகின்றனர்.

இதுகுறித்த கேள்வி ஒன்றுக்கு தனது சமூக வலைத்தளத்தில் கருத்து தெரிவித்த எஸ்.வி.சேகர், ‘இதை பெருதுபடுத்துவது சரியல்ல என்பது என் கருத்து. விஜய் ஒரு நல்ல நடிகர். அந்த நடிகரின் ரசிகர்களுக்காக விற்கப்படும் பொருட்கள். இதில் காவி வேட்டி, ருத்திராக்‌ஷம் கூட இருக்கின்றதே. இதை விற்கும் கடைக்காரர்கள் அனைவரும் மாற்று மதத்தினரா. விஜய் வீபூதி பூசி நடிக்கும் போது பிடிக்கும் நமக்கு அவர் சிலுவை அணியும் போது பிடிக்காதது சரியல்ல. அவர் எங்காவது பொது வெளியில் தன் மதத்தை மட்டும் உயர்வாக பேசி மற்ற மதத்தை தாழ்வாக பேசி பார்த்துள்ளீரா’ என்று எஸ்வி சேகர் குறிப்பிட்டு விஜய்க்கும் பிகில் படக்குழுவினர்களுக்கும் ஆதரவான கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

More News

'பிகில்' வெற்றிக்காக விஜய் ரசிகர்கள் செய்த உருக்கமான வழிபாடு

விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் வரும் 25ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாக இன்னும் இரண்டு நாட்கள் மட்டுமே இருப்பதால் படத்தின் எதிர்பார்ப்பு அதிகமாகி வருகிறது

ரஜினி கட்சி தொடங்குவதால் எந்த நன்மையும் இல்லை: கே.எஸ்.அழகிரி

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அரசியல் கட்சி தொடங்க அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்து வைத்திருப்பதாகவும், தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் அறிவிப்புக்கு சில மாதங்களுக்கு

புளூசட்டை மாறனின் முதல் படம் குறித்த தகவல்

ஆன்லைன் சினிமா விமர்சகர் புளூ சட்டை மாறன் ஒரு படத்தை இயக்கி வருகிறார் என்பதும் இந்த படத்தை 'மாநாடு' தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரிக்கின்றார் என்பதும் தெரிந்ததே

'பிகில்', 'கைதி' படக்குழுவினர்களுக்கு தமிழக அமைச்சர் எச்சரிக்கை

வரும் தீபாவளியை முன்னிட்டு வரும் 25ஆம் தேதி விஜய் நடித்த 'பிகில்' மற்றும் கார்த்தி நடித்த 'கைதி' ஆகிய திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த படம் வெளியாகும்

எனக்கு அந்த பொண்ணை ரொம்ப பிடிக்கும்டா... 'ஆதித்ய வர்மா டிரைலர்

சீயான் விக்ரம் மகன் துருவ் விக்ரம் நடித்த 'வர்மா' திரைப்படம் கிடப்பில் போடப்பட்ட நிலையில் மீண்டும் இயக்குனர் கிரிசய்யா இயக்கத்தில் அதே படம் 'ஆதித்ய வர்மா' என்ற பெயரில் படமானது.