close
Choose your channels

ஓ இதுதான் தமிழ் மண்ணா? பாஜக வெறுப்பாளர்களை வெறுப்பேற்றிய எஸ்.வி.சேகர்

Saturday, May 25, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நடைபெற்று முடிந்த பாராளுமன்ற தேர்தலில் தமிழகம், கேரளம் தவிர இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பாஜக வெற்றி வாகை சூடியுள்ளது. 13 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சிக்கு ஒரு தொகுதி கூட கிடைக்காத அளவுக்கு மாஸ் வெற்றியை பாஜக பெற்றுள்ளது. இருப்பினும் தமிழக பாஜகவினர் இந்த வெற்றியை கொண்டாட முடியாத நிலையில் உள்ளனர்.

தமிழகம் பெரியார் மண் என்றும், இங்கு தாமரை மலரவே மலராது என்றும் திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டவர்கள் பாஜகவின் தோல்வி குறித்து கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் ஒருவர் தனது தலையில் மண்ணை அள்ளிப்போடும் புகைப்படம் ஒன்றை பதிவு செய்துள்ள நடிகரும் பாஜக பிரமுகருமான எஸ்.வி.சேகர், 'ஓ இதுதான் தமிழ் மண்ணா' என்று கிண்டலுடன் கூடிய ஒரு புகைப்பட பதிவை பதிவு செய்துள்ளார். இந்த பதிவுக்கு தமிழக நெட்டிசன்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.