திரையுலகில் இன்று இன்னொரு பிரபலம் மறைவு: டி. ராஜேந்தர் இரங்கல்

  • IndiaGlitz, [Thursday,May 06 2021]

தமிழ் திரையுலகை சேர்ந்த பாடகர் கோமகன் மற்றும் நகைச்சுவை நடிகர் பாண்டு ஆகிய இருவரும் இன்று உயிரிழந்தார்கள் என்ற செய்தி திரையியுலகினரை அதிர்ச்சி மேல் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. குறிப்பாக இவர்கள் இருவருமே கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ஏற்கனவே இரண்டு திரையுலகினர் காலமான நிலையில் சற்று முன் இன்னொருவர் காலமானதாக வெளிவந்திருக்கும் செய்தி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அவர்தான் டி ராஜேந்தரின் முதல் திரைப்படமான ‘ஒரு தலை ராகம்’ என்ற படத்தை தயாரித்த தயாரிப்பாளர் இப்ராஹிம் என்பது குறிப்பிடத்தக்கது.

தயாரிப்பாளர் இப்ராஹிம் டி ராஜேந்தரின் ’ஒரு தலை ராகம்’ திரைப்படத்தை தயாரித்தவர் என்பதும் அதன் பின்னர் பல திரைப்படங்களை அவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வயது மூப்பு காரணமாக அவர் உயிரிழந்தார் என அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். தயாரிப்பாளர் இப்ராகிம் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

தனது முதல் படத்தை தயாரித்த இப்ராகிம் மறைவிற்கு டி ராஜேந்தர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் கூறியிருப்பதாவது: ஒரு தலை ராகம் எனது முதல் படம். அந்த படத்தின் தயாரிப்பாளர் இப்ராகிம் அவர்கள் மறைந்துவிட்டார் என்ற செய்தி என் இதயத்தில் இடியாய் பாய்கிறது. இதனால் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளானேன். என்னை திரை உலகிற்கு அரங்கேற்றம் செய்தவர் அவர்தான். என் திரையுலக படகை கரை சேர்த்தவர், இன்று மறைந்துவிட்டார். இந்த உலகை விட்டுப் பிரிந்து விட்டார். கண்ணீரால் என் கண்கள் நனைகிறது. இன்று என் மனம் கடந்த காலத்தில் அவரோடு வாழ்ந்த காலத்தை நினைக்கிறது. அவரது குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறிக்கொள்கிறேன். அவரது ஆன்மா சாந்தி அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்’ .

More News

அதிமுக கொடியை வடிவமைத்து கொடுத்தவர்: பாண்டுவுக்கு ஓபிஎஸ் இரங்கல்

அதிமுக கொடியை வடிவமைத்துக் கொடுத்தவரும் நகைச்சுவை நடிகருமான பாண்டுவின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்துக் கொள்வதாக அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம்

மே 16 வரை முழு ஊரடங்கு… உத்தரவு பிறப்பித்த கேரள முதல்வர்!

கேரளாவில் மே 8 ஆம் தேதி முதல் மே 16 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு  உத்தரவை வெளியிட்டு உள்ளார் அம்மாநில முதல்வர் பினராயி விஜயன்.

நடிகை ஆண்ட்ரியாவுக்கு கொரோனா: தனிமைப்படுத்தி கொண்டு பாட்டு பாடும் வீடியோ வைரல்!

தமிழ் திரைஉலகின் பிரபல நடிகையும் பாடகியுமான ஆண்ட்ரியாவுக்கு கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு உள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவர் தனிமைப்படுத்தி கொண்டார்.

டீன் ஏஜில் நண்பர்களுடன் அஜித்: வைரல் புகைப்படத்தில் இன்னொரு பிரபலம்!

தல அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தின் அப்டேட் ஒரு ஆண்டுக்கு மேல் வராமல் இருந்தாலும் அவரது செய்திகள் இணையதளங்களிலும் சமூக வலைத்தளங்களிலும் வராத நாளே இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது 

கொரோனாவால் பெற்றோரை இழந்து அனாதையாக தவிக்கும் குழந்தைகளுக்கு… இளம் நடிகர் செய்த காரியம்!

தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் முக்கியக் காதாபாத்திரங்களில் நடித்து தற்போது கதாநாயகனாக உருவெடுத்து இருப்பவர் சந்தீப் கிஷன்.