சிம்புவுக்கு திருமணம் எப்போது? சென்னை திரும்பிய ராஜேந்தர் பேட்டி!


Send us your feedback to audioarticles@vaarta.com


நடிகர், இயக்குனர், தயாரிப்பாளர் டி ராஜேந்தர் கடந்த சில நாட்களுக்கு முன் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா சென்றார் என்பதை பார்த்தோம். இந்த நிலையில் அமெரிக்காவில் சிகிச்சை முடித்து விட்டு இன்று காலை டி ராஜேந்தர் சென்னை திரும்பினார்.
இன்று அதிகாலை சென்னை திரும்பி டி ராஜேந்தர் சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சக்கரம் சுழல ஆரம்பித்தால் கீழே இருப்பவர்கள் மேலே செல்வார்கள், மேலே இருப்பவர்கள் கீழே செல்வார்கள். கல்யாணம் என்பதெல்லாம் இறைவன் நிச்சயிக்க வேண்டும் என்றும் மனிதனால் நிச்சயம் செய்ய முடியாது என்றும் இறைவன் நிச்சயித்தால் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்று டி ராஜேந்தர் கூறினார்.
நிச்சயமாக சிம்புவின் நல்ல மனதிற்கு இறைவன் ஒரு நல்ல பெண்ணை, நல்ல குலமகளாக, திருமகளாக, எங்கள் வீட்டுக்கு நல்ல மருமகளாக இறைவன் அனுப்புவார் என்று நான் அனைத்து மத இறைவனை வேண்டி கேட்டுக்கொள்கிறேன் என்று கூறினார்
மேலும் சிறப்பு தோற்றத்தில் சிம்பு நடித்த ’மஹா’ என்ற திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளது என்றும், அந்த படம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது என்றும் டி ராஜேந்தர் கூறினார்.
சிம்புக்கு திருமணம் எப்போது? டி.ராஜேந்தர் சொன்ன பதில் @SilambarasanTR_ pic.twitter.com/VM7Ulaes9A
— meenakshisundaram (@meenakshinews) July 22, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.