எப்போது, எப்படி பேச வேண்டும் என எனக்கு தெரியும்: தர்பார்' நஷ்ட ஈடு குறித்து டி.ராஜேந்தர்

  • IndiaGlitz, [Saturday,February 08 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ‘தர்பார்’ திரைப்படத்தால் நஷ்டம் என அந்த படத்தின் விநியோகிஸ்தர்கள் கூறி வரும் நிலையில் இதுகுறித்து விநியோகிஸ்தர் சங்கத்தின் தலைவர் டி.ராஜேந்தர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

விநியோகஸ்தர்கள் நஷ்டமடைந்து விட்டோம் என்ற கருத்தைத் தெரிவிக்கும்போது, அந்த விஷயத்தை ஆராய்ந்து பார்க்காமல், என்ன விஷயம் என்பதைப் புரிந்து கொள்ளாமலேயே, நஷ்டம் அடையாமல் நஷ்டப்பட்டு விட்டது போன்ற மாயையை விநியோகஸ்தர்கள் உருவாக்குவதாக சிலர் குற்றம் சாட்டுவதை, விநியோகஸ்தர் என்ற முறையில் நான் வன்மையாக மறுக்கிறேன், கண்டிக்கிறேன்.

எவ்வளவு வசூல் ஆகியிருக்கிறது என விசாரித்துப் பாருங்கள். பாதிப்பு இல்லாமலா அத்தனை விநியோகஸ்தர்களும் பாதிக்கப்பட்டிருக்கிறோம் என்று கூறுவார்கள்? அவர்கள் நடிப்பதற்காகவா வந்துள்ளனர்? அவர்கள் நஷ்மடைந்து கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர், கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றனர்.

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களின் விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் என்ற முறையிலும், தமிழ்நாடு விநியோகஸ்தர்கள் சங்கக் கூட்டமைப்பின் தலைவர் என்ற முறையிலும் பாதிக்கப்பட்ட விநியோகஸ்தர்கள் வந்து என்னையும், சங்கத்தில் உள்ளவர்களையும் சந்தித்தனர். ‘எங்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும்’ என்று கோரிக்கை விடுத்தனர்.

இதைப் பற்றி எடுத்த எடுப்பில் ‘வாய் புளித்ததோ மாங்கா புளித்ததோ’ என நான் பேசவில்லை. ஏனென்றால், ரஜினிகாந்த் எனக்கும் இனிய நண்பர். அதனால், இந்த விஷயத்தில் எப்போது, எப்படி, என்ன விதத்தில் பேசவேண்டுமோ, அப்போது, அப்படிப் பேசுவேன்” எனத் தெரிவித்தார்.

More News

டெல்லி சட்டமன்றத் தேர்தல் மந்தமான வாக்குப் பதிவு

டெல்லி சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று காலை 8 மணிக்

வரலாற்றிலேயே அதிமாக பதிவான வெப்பநிலை.. உருகும் அண்டார்டிகா.. திணறப்போகும் உலகம்..!

அதிகரிக்கும் புவி வெப்பமயமாதலால் அண்டார்டிகா வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு உச்சபட்ச வெப்பநிலை பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

மாஸ்க்கினால் உண்டான வடுக்கள்.. அசராமல் மக்கள் பணியாற்றும் சீன செவிலியர்கள்..! #Coronovirus

இந்தப் புகைப்படம் மக்களின் இதயங்களை வென்றுள்ளன. இவர்கள்தான் உண்மையான தேவதைகள் எனக் கொண்டாடுகின்றனர் சீன மக்கள்.  

மும்மூர்த்திகள் அருள் புரியும் சுசீந்திரன் கோவில் – தொன்ம, வரலாற்று கதை

கன்னியாக்குமரி செல்பவர்கள் போகிற போக்கில் தலைக்காட்டி விட்டு வரலாம் என்ற விதத்திலாவது சுசீந்திரம் தாணுமலாயக் கோவிலைத் தரிசித்துவிட்டு வருவர்

பிகில் மட்டுமல்ல.. 2.0, தர்பார் படங்களுக்கும் தலா ரூ.100 கோடி பைனான்ஸ்.. யார் இந்த அன்புச்செழியன்?!

சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் வெளியான இரண்டு படங்களுக்கு மட்டும் சுமார் 100 கோடி ரூபாயை லைக்கா நிறுவனத்திற்கு அன்புச்செழியன் கொடுத்ததாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்