ஆபாச சைட்டில் கணக்கு பாடம் நடத்திய ஆசிரியர்… மாணவர் ரியாக்ஷன்ஸ் என்ன தெரியுமா?

  • IndiaGlitz, [Tuesday,October 26 2021]

ஆபாச வீடியோ வெளியிடும் வெப் சைட் ஒன்றில் தைவான் நாட்டைச் சேர்ந்த கணக்கு ஆசிரியர் சாங் சூ என்பவர் தனது கணித வீடியோக்களைப் பதிவிட்டு ஆண்டுதோறும் கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டிவருகிறார். இந்தத் தகவல் தற்போது நெட்டிசன்களிடையே தீயாய் பரவி வருகிறது.

தைவான் நாட்டைச் சேர்ந்த சாங் சூ என்பவர் கணக்குப் பாடத்தில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ளார். பள்ளி மாணவர்களுக்கு கணக்குப் பாடம் நடத்திக் கொண்டிருந்த இவருக்கு ஆன்லைன் வகுப்பெடுக்கும் ஆர்வம் வந்திருக்கிறது. இதற்காக கணக்குப் பாடங்களை சிறுசிறு வீடியோக்களாக ரெக்கார்ட் செய்து அதை பார்ன் வீடியோ பார்க்கும் வெப் சைட் ஒன்றில் பதிவிட்டுள்ளார்.

முதலில் இதற்கு பெரிய அளவில் வரவேற்பு கிடைக்காது என்றே சாங் சூ கருதிக் கொண்டிருந்தாராம். ஆனால் நாளடைவில் சாங் சூ பதிவிடும் வீடியோக்களை ஆபாச வீடியோ தளத்தில் தேடிப்படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து இருக்கிறது. இதனால் பார்வையாளர்களின் எண்ணிக்கை அதிகமாகி தற்போது ஆண்டுதோறும் 75 லட்சம் தைவான் டாலரை வருமானமான பெற்று வருகிறார்.

இது அமெரிக்க மதிப்பில் 2.5 லட்சம் டாலர் என்பதும் இந்திய மதிப்பில் 1.87 கோடி ரூபாய் என்பதும் குறிப்பிடத்தக்கது. சோஷியல் மீடியாவில் தனிக்கவனம் பெற்றிருக்கும் இந்தத் தகவலைப் பார்த்த நெட்டிசன்ஸ், இதுவும் செம ஐடியா… எனக் கருத்துப் பகிர்ந்து கொண்டு வருகின்றனர்.

More News

உன் மேல பயங்கரமா கோபமா இருக்கேன்: ஸ்ருதியை எச்சரிக்கும் தாமரை!

பிக்பாஸ் நிகழ்ச்சி 25 நாட்களை கடந்து வெற்றிகரமாக சென்று கொண்டிருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சி தற்போதுதான் சூடுபிடித்து உள்ளது என்பதும் போட்டியாளர்களுக்கு இடையே கருத்து வேறுபாடுகள்

ஐபிஎல் தொடரில் புதிய 2 அணிகள்… Owners யார் தெரியுமா?

2022-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் புதிதாக இரண்டு அணிகள் இடம்பெறும் என்று ஏற்கனவே பிசிசிஐ தெரிவித்து

நாமினேஷனில் எத்தனை பேர்? யார் யாரையெல்லாம் நாமினேட் செய்தார்கள்?

பிக்பாஸ் வீட்டில் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை நாமினேஷன் படலம் நடந்த நிலையில் நேற்றைய நாமினேஷன் படலத்தில் மொத்தம் 9 பேர்கள் நாமினேஷன் செய்யப்பட்டனர். அவர்களின்

ஸ்ருதி ஆட்டம் ஆரம்பம்: தாமரை செல்வியை கதற வைத்ததால் பரபரப்பு!

பிக்பாஸ் வீட்டில் சமீபத்தில் நடந்த பஞ்ச தந்திரம் என்ற டாஸ்க்கில் 5 காயின்கள் வழங்கப்பட்டது என்பதும் அந்த ஐந்து காயின்கள் தாமரை, இசைவாணி, வருண், பாவனி ரெட்டி மற்றும் அபினய் ஆகியோர் கையில்

தாதா சாகேப் பால்கே விருது: ரஜினிக்கு வாழ்த்து தெரிவித்த ஜனாதிபதி, பிரதமர், கவர்னர், முதல்வர்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு இன்று திரை உலகின் மிக உயர்ந்த விருதான தாதா சாகேப் பால்கே விருதை இந்திய துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்கள் அளித்தார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.