தமன்னா முத்தம் தர விரும்பும் ஹீரோ!

  • IndiaGlitz, [Saturday,March 02 2019]

தமிழ், தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'கண்ணே கலைமானே' திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே ஹீரோவுக்கு இணையான வேடங்களை மட்டும் தேர்வு செய்து நடித்து வரும் தமன்னா, கதைக்கு தேவை என்றால் மட்டுமே முத்தம் உள்பட கவர்ச்சி காட்சிகளில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில் ஹிருத்திக் ரோஷன் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் முத்தக்காட்சியில் நடிக்க தயார் என்று தமன்னா கூறியுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

மேலும் ஹிருத்திக் ரோஷன் குறித்து தமன்னா தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, 'என் சினிமா வாழ்க்கையின் ஆரம்ப காலத்திலிருந்து நான் பார்த்து வியந்து கொண்டிருக்கும் ஒருவர் என்றால் அது ஹிருத்திக் தான். அவருடைய கடின உழைப்பு என்னை ஈர்த்தது.

ஹிருத்திக்கை நேரில் பார்க்க வேண்டும் என பல வருடங்களாக காத்திருந்தேன், அது இப்போது நிறைவேறியது. அவருடன் புகைப்படம் எடுக்க வாய்ப்பு கிடைத்தது எனது அதிர்ஷ்டம் என்று கூறியுள்ளார்.