close
Choose your channels

'பிகில்', கைதி'யுடன் தீபாவளியில் மோதும் தமன்னா படம்!

Wednesday, September 18, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிப்பில், அட்லி இயக்கத்தில், ஏஆர் ரஹ்மான் இசையில், ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகியுள்ள 'பிகில் திரைப்படம் வரும் தீபாவளி அன்று வெளியாவது ஏற்கனவே தயாரிப்பு தரப்பினர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதி சென்சாருக்கு பிறகு அறிவிக்கப்படும் என இந்த படத்தின் நிர்வாக தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாதி அவர்கள் ஏற்கனவே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் விஜய்யின் 'பிகில்' படத்துடன் கார்த்தி நடித்த 'கைதி' திரைப்படமும் தீபாவளி அன்று வெளியாக உள்ளது. இந்த படத்தின் சரியான ரிலீஸ் தேதியும் விரைவில் அறிவிக்கப்படும் என தெரிகிறது. மேலும் வரும் தீபாவளியன்று விஜய்யின் பிகில் மற்றும் கார்த்தியின் 'கைதி' ஆகிய இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் என்று எதிர்பார்த்த நிலையில், தற்போது திடீரென தீபாவளி ரேஸில் தமன்னாவின் 'பெட்ரோமாக்ஸ்' என்ற படமும் இணைந்துள்ளது. இதில் ஈகிள் ஐ புரடொக்சன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி இந்த படத்தை ரோஹின் வெங்கடேசன் இயக்கியுள்ளார். தமன்னா முக்கிய வேடத்தில் நடித்துள்ள இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார்

விஜய், கார்த்தி என இரண்டு பெரிய ஸ்டார்களின் படங்கள் ரிலீஸ் ஆகும் தினத்தில் தமன்னாவின் படமும் இணைந்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.