மீண்டும் ஒரு 'காவாலா' பாடல்.. தமன்னாவின் கிளாமர் பாடல் ரிலீஸ் தேதி அறிவிப்பு..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ், தெலுங்கு திரையுலகில் நடிகை தமன்னா, அவ்வப்போது ஒரு பாடலுக்கு மட்டும் நடனம் ஆடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறிப்பாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 'ஜெயிலர்' திரைப்படத்தில் அவர் ‘காவாலா’ என்ற பாடலுக்கு நடனமாடிய நிலையில், அந்த பாடல் அந்த படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய காரணமாக இருந்தது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதே போல் 'அரண்மனை 4’ படத்தில் ராஷி கண்ணாவுடன் தமன்னா, நடனமாடிய 'அச்சு அச்சு அச்சச்சோ' பாடலும் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பாலிவுட்டில் உருவாகி உள்ள 'ரெய்டு 2' என்ற திரைப்படத்தில் தமன்னா ஒரு பாடலுக்கு கிளாமர் நடனம் ஆடி உள்ள நிலையில், அந்த பாடலின் புரோமோ வீடியோவை அவர் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த பாடல் நாளை வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாடல் இன்னொரு ஹிட் பாடலாக இருக்கும் என்பது, இந்த 22 வினாடிகள் கொண்ட ப்ரோமோ வீடியோவில் இருந்து தெரிய வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
மே 1ஆம் தேதி திரையரங்கில் வெளியாக இருக்கும் இந்த படத்தில், அஜய் தேவ்கன், ரித்தேஷ் தேஷ்முக் , சுப்ரியா பதக் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
மேலும் இந்த படத்தில் தமன்னா மட்டுமின்றி, இந்த படத்தில் ஜாக்குலின் பெர்னாண்டஸ் ஒரு பாடலுக்கு நடனம் ஆடியுள்ளார் என்பதும், அதேபோல் யோ யோ ஹனி சிங் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Sabke dil aur dimaag pe chadhega #Nasha!💃🔥
— Tamannaah Bhatia (@tamannaahspeaks) April 10, 2025
Song Out Tomorrow. #Raid2 knocking in cinemas on 1st May.@ajaydevgn @Riteishd @Vaaniofficial #RajatKapoor #SaurabhShukla #SupriyaPathak @amit_sial @rajkumar_rkg #BhushanKumar #KrishanKumar @KumarMangat @AbhishekPathakk… pic.twitter.com/kEnrvvNDIb
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com