தமன்னாவின் அடுத்த படத்தில் விஜய்யின் குட்டிக்கதை

  • IndiaGlitz, [Monday,September 30 2019]

தமன்னா நடிப்பில் உருவாகியுள்ள ‘பெட்ரோமாக்ஸ்’ திரைப்படம் வரும் அக்டோபர் 11ஆ,ம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர் சற்றுமுன் வெளியாகியுள்ளது

இந்த டீசரின் ஆரம்பமே தொலைக்காட்சியில் ‘நான் ரொம்ப ரசிச்ச ஒரு குட்டிக்கதை சொல்கிறேன்’ என்று விஜய் கூறுவது போன்ற காட்சி உள்ளது. அதேபோல் ‘சிங்கம்’ படத்தில் சூர்யா பேசும் வசனமும், கவுண்டமணியின் ‘வைதேகி காத்திருந்தாள்’ பெட்ரோமாக்ஸ் லைட் வசனமும் டிரைலரின் இறுதியில் உள்ளது

தமன்னாவின் த்ரில் நடிப்பு, யோகிபாபுவின் காமெடி, பேய்களின் அட்டாகசங்கள், கம்ப்யூட்டர் கிராபிக்ஸில் வரும் பேய்க்காட்சிகள், ஜிப்ரானின் அதிரடி பின்னணி இசை என படம் முழுவதும் த்ரில் மற்றும் காமெடி கலந்து உள்ளதால் படமும் ரசிக்கும் வகையில் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

‘அதே கண்கள்’ இயக்குனர் ரோஹித் வெங்கடேசன் இயக்கத்தில் டேனி ரெய்மாண்ட் ஒளிப்பதிவில் ஜான்பால் படத்தொகுப்பில் உருவாகியுள்ள இந்த படம் தமன்னாவின் இன்னொரு வெற்றிப்படமாக அமையுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்