close
Choose your channels

ரஜினியின் 'ஜெயிலர்' திரைப்படத்தில் தமன்னாவா? என்ன கேரக்டர் தெரியுமா?

Thursday, August 11, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ‘ஜெயிலர்’ படத்தின் படப்பிடிப்பு நேற்று முதல் ஆரம்பித்ததாகவும், ஆகஸ்ட் 15 முதல் ரஜினிகாந்த் இந்த படப்பிடிப்பில் கலந்து கொள்வார் என்று கூறப்பட்டது.

இந்த நிலையில் ரஜினியின் ‘ஜெயிலர்’ படத்தில் நாயகியாக ஐஸ்வர்யாராய் நடிக்க இருப்பதாகவும் மேலும் ஒரு முக்கிய வேடத்தில் ரம்யாகிருஷ்ணன் நடிக்க இருப்பதாகவும் கூறப்பட்டது.

அதுமட்டுமின்றி ரஜினியின் மகளாக பிரியங்கா மோகன் நடிக்க இருப்பதாகவும், அவருக்கு ஜோடியாக சிவகார்த்திகேயன் நடிக்கவிருப்பதாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில் தற்போது திடீரென இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் தமன்னா நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

தமன்னா இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்க இருப்பதாக ஒரு சிலரும், தமன்னா ரஜினியின் பிளாஷ்பேக் காட்சியில் அவருக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் இருவேறு தகவல்கள் இணையதளங்களில் கசிந்து வருகின்றன. இதில் எது உண்மை என்பதை போக போக பார்ப்போம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.