close
Choose your channels

'வேதாளம்' ரீமேக்கில் இணையும் பிரபல தமிழ் நடிகை?

Friday, September 24, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தல அஜீத் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் உருவான ’வேதாளம்’ திரைப்படம் கடந்த 2015 ஆம் ஆண்டு தீபாவளி அன்று வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பது தெரிந்ததே. இந்த படம் ரூபாய் 120 கோடிக்கு மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் தற்போது இந்த திரைப்படம் தெலுங்கில் ரீமேக் செய்யப்பட்டு வருகிறது என்பதும் இந்த படத்தில் அஜீத் நடித்த கேரக்டரில் சிரஞ்சீவி நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் லட்சுமி மேனன் நடித்த தங்கை கேரக்டரில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவிப்பு செய்யப்பட்டது என்பதும் இந்த படத்திற்கு ’போலோஷங்கர்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் ’வேதாளம்’ திரைப்படத்தில் நாயகியாக ஸ்ருதிஹாசன் நடித்து இருந்த நிலையில் அந்த கேரக்டரில் நடிக்க நடிகை தமன்னா ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ’சைரா நரசிம்ம ரெட்டி’ என்ற திரைப்படத்தில் சிரஞ்சீவியுடன் நடித்துள்ள தமன்னா தற்போது மீண்டும் அவருடன் இணைய உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.