சூப்பர்ஹிட் படத்தின் ரீமேக்கில் தமன்னா; டைட்டில் அறிவிப்பு

  • IndiaGlitz, [Monday,August 24 2020]

தமிழ் உள்பட தென்னிந்திய மொழிகளில் முன்னணி நடிகையாக இருந்து வரும் தமன்னா நடிப்பில் இரண்டு தெலுங்கு படங்களும் ஒரு இந்தி படமும் ரிலீசுக்கு தயாராக உள்ளது. திரையரங்குகள் திறந்தவுடன் இந்த படங்கள் ரிலீஸ் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமன்னாவின் அடுத்த படம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. கன்னடத்தில் சூப்பர்ஹிட் ஆன திரைப்படம் 'Love Mocktail’. பிரபல கன்னட நடிகர் கிருஷ்ணா இயக்கத்தில் அவரே தயாரித்து நாயகனாக நடித்த இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் தற்போது தெலுங்கில் ரீமேக் ஆகவுள்ளது.

இந்த படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கிருஷ்ணா நடித்த வேடத்தில் சத்யதேவ் நடிக்கவுள்ளார். அதேபோல் நாயகி மிலானா நாகராஜ் வேடத்தில் தமன்னா நடிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ’Gurtundhaseetakalam’என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. நாகசேகர் இயக்கும் இந்த படத்திற்கு கால பைரவா இசையமைக்கவுள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

More News

சூரரை போற்று படத்தின் உண்மையான வியாபாரம் எவ்வளவு? பரபரப்பு தகவல்

சூர்யா நடித்த 'சூரரைப்போற்று' திரைப்படம் வரும் அக்டோபர் 30-ஆம் தேதி ஓடிடியில் ரிலீசாக போகிறது என்பது அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.

எனக்கு கடவுள் நம்பிக்கை கிடையாது: விநாயகர் சிலை விவகாரம் குறித்து உதயநிதி விளக்கம்

நாடு முழுவதும் நேற்று முன் தினம் விநாயகர் சதுர்த்தி தினம் கொண்டாடப்பட்ட நிலையில் நேற்று நள்ளிரவு திடீரென நடிகரும் திமுக இளைஞரணி செயலாளருமான உதயநிதி

அப்படியே முகத்தில் குத்துவேன்… கேள்வியைச் சமாளிக்க முடியாமல் பத்திரிகையாளரை மிரட்டிய அதிபர்!!!

பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சனாரோ அதிபராக பதவி ஏற்றுக்கொண்டது முதலே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார்.

பிலிப்பைன்ஸில் ஒரேநாளில் அடுத்தடுத்த 2 குண்டுவெடிப்பு!!! குலைநடுங்கும் சம்பவம்!!!

பிலிப்பைன்ஸ் நாட்டில் இன்று மதியம் 12 மணி மற்றும் 1 மணி என இரண்டு குண்டு வெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது.

14 மாதங்களில் 8 குழந்தைகளைப் பெற்றெடுத்த 65 வயது பெண்!!! தலையைச்சுற்ற வைக்கும் அரசு ஆவணம்!!!

பீகார் மாநிலத்தின் அரசு ஆவணங்களில் 65 வயது பெண்மணி ஒருவர் 14 மாதங்களில் 8 குழந்தைகளை பெற்றெடுத்தாகத் தகவல் சேகரிக்கப் பட்டுள்ளது.