தமிழ்நாடு சந்திக்கப்போகும் வித்தியாசமான தேர்தல்.. விஜய் பேச்சுக்கு நடிகரின் பதிலடி..!


Send us your feedback to audioarticles@vaarta.com


2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்றத் தேர்தல், வித்தியாசமான தேர்தலாக இருக்கும் என்றும், இரண்டே இரண்டு கட்சிகளுக்கு இடையே தான் போட்டி இருக்கும் என்றும் ஒன்று TVK, இன்னொன்று DMK என்று, நேற்று நடைபெற்ற தமிழக வெற்றிக் கழகத்தின் பொது குழுவில் விஜய் பேசினார் என்பதை பார்த்தோம்.
அவரது இந்த பேச்சுக்கு அதிமுக பிரமுகர்கள் ஏற்கனவே பதிலடி கொடுத்திருந்தனர். திமுகவுக்கு என்றுமே போட்டியாக அதிமுக தான் இருக்கும் என முன்னாள் அமைச்சர் ஜெயகுமார் உள்ளிட்ட சில தலைவர்கள் பேட்டி அளித்திருந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகர் மற்றும் இயக்குநர் போஸ் வெங்கட், தனது எக்ஸ் பக்கத்தில் விஜய்யின் பேச்சுக்கு பதிலடி கொடுத்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
2026/ தமிழ்நாடு சந்திக்கப்போகும் வித்தியாசமான தேர்தலாக இருக்கும்.. 2026 ELECTION RESULT.திமுக- 200 இடங்கள், அதிமுக- 34 இடங்கள், பாஜக- 0. நாதக-0 இத்துடன் தேர்தல் செய்திகள் முடிவடைகிறது.. dream cm-2026 என பதிவு செய்துள்ளார்.
போஸ் வெங்கட்டின் இந்த பதிலுக்கு, பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் கமெண்ட்ஸ் குவிந்து வருகின்றன.
2026/ தமிழ்நாடு சந்திக்கப்போகும் வித்தியாசமான தேர்தலாக இருக்கும்.. 2026 ELECTION RESULT. திமுக- 200 இடங்கள் அதிமுக- 34 இடங்கள் பஜக- 0. நதக-0 இத்துடன் தேர்தல் செய்திகள் முடிவடைகிறது.. dream cm-2026 😅😅
— Bose Venkat (@DirectorBose) March 29, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments