பிரபல தமிழ் நடிகர்-தயாரிப்பாளருக்குக் ஆண் குழந்தை: திரையுலகினர் வாழ்த்து!

  • IndiaGlitz, [Saturday,January 21 2023]

பிரபல தமிழ் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்ததை அடுத்து திரையுலகினார் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழ் திரை உலகின் பிரபல நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஆர்கே சுரேஷ் பல படங்களை தயாரித்த நிலையில் பாலா இயக்கிய ’தாரை தப்பட்டை’ என்ற படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். அதன் பிறகு அவர் நாயகன், வில்லன், குணசித்திர வேடங்களில் நடித்து வருகிறார். ஆர்கே சுரேஷ் முக்கிய வேடத்தில் நடித்த ‘விசித்திரன்’ என்ற படம் கடந்த ஆண்டு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இந்த நிலையில் ஆர்.கே. சுரேஷ் மனைவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன் வளைகாப்பு நிகழ்ச்சி நடந்தது என்பதும் அந்த நிகழ்ச்சிக்கு தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உள்பட பலர் நேரில் கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தற்போது ஆர்கே சுரேஷ், தனக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளதாக தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ளார். குழந்தைக்கு சில நிமிடங்கள் சுவாச பிரச்சனை இருந்ததாகவும், ஆனால் தற்போது குழந்தையின் உடல்நிலை கடவுள் அருளால் நன்றாக உள்ளது என்றும் ஆர்கே சுரேஷ் குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் தனது குழந்தையின் புகைப்படத்தையும் பதிவு செய்த நிலையில் அந்த குழந்தைக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலகினார் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

More News

உங்களுக்கும் பெட்டிக்கும் ஒரு ராசி இருக்கு... பிக்பாஸ் கலாய்த்தது யாரை?

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு விருந்தினராக வந்த ஒருவரை உங்களுக்கும் பெட்டிக்கும் ஒரு ராசி இருக்கு என பிக் பாஸ் கலாய்த்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

பிரத்யேக ஸ்டைலில் ஆடை: பாராட்டுகளை குவிக்கும்  ஃபேஷன் ஐகான் ராம் சரண்

இன்று இந்திய திரையுலகம், தெலுங்கு திரையுலகத்தை வியந்து பார்க்கும் காலகட்டம் இது. பிரம்மாண்டமான படைப்புகளால் உலக அளவிலான ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் தெலுங்கு திரையுலகம்,

எம்.எல்.ஏவின் அக்கா மகன் என அசீம் கூறியது பொய்யா? சாயத்தை வெளுக்கும் எம்.எல்.ஏ!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் இறுதி போட்டியாளர்களில் ஒருவராகிய அசீம், கடந்த சில வாரங்களுக்கு முன்னர் தான் தமிழக எம்எல்ஏ ஒருவரின் அக்கா மகன், அதனால்தான் தன்னிடம் விக்ரமன் விலகி செல்வதாகவும்

103 நாட்கள் இருந்த மைனாவுக்கு சம்பளம் இவ்வளவுதானா? அப்ப அமுதவாணன் தான் புத்திசாலி!

பிக் பாஸ் இறுதிப் போட்டியாளர்களில் ஒருவராக கருதப்பட்ட மைனா, திடீரென நேற்று மிட்நைட் எவிக்சன் காரணமாக வெளியேற்றப்பட்டார் என்ற தகவலை ஏற்கனவே பார்த்தோம்.

'லவ் டுடே' பாணியில் செல்போனை மாற்றிய மணமகள்.. போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட மணமகன்!

'லவ் டுடே' பாணியில் மணமகனின் செல்போனை வாங்கி பார்த்த மணமகள் அதிர்ச்சி அடைந்து காவல்துறைக்கு தகவல் கொடுத்ததை அடுத்து மணமகன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.