தமிழ் நடிகர் டாக்டர் சேதுராமன் உயிரிழந்தார்: சந்தானம் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Friday,March 27 2020]

தமிழ் நடிகரும், டாக்டருமான சேதுராமன் மாரடைப்பு காரணமாக நேற்றிரவு உயிரிழந்தார். அவருக்கு வயது 37.

நேற்று இரவு சென்னையில் சேதுராமன் தன்னுடைய வீட்டில் இருக்கும் போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதனையடுத்து உடனே அவர் அருகிலிருந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்குச் சிகிச்சை பலனின்றி இரவு 8:30 மணியளவில் காலமானார். டாக்டர் சேதுராமனுக்கும் உமையாள் என்ற மனைவியும் ஒரு மகளும் உள்ளனர்.

தோல் மருத்துவரான இவர் எம்.பி.பி.எஸ், எம்.டி படித்ததோடு மும்பை மற்றும் சிங்கப்பூரில் லேசர் முறையில் தோல் சிகிச்சை அளிக்கும் பயிற்சியும் பெற்றவர். இவரிடம் பல்வேறு திரையுலக பிரபலங்கள் தோல் சிகிச்சை பெற்று வந்தனர். சென்னை அண்ணாநகரில் கிளினிக் வைத்து நடத்தி வந்த சேதுராமனுக்கு நடிகர் சந்தானம் நெருங்கிய நண்பர் ஆவார். சேதுராமன் மறைவிற்கு சந்தானம் உள்பட பல திரையுலக பிரமுகர்கள் தங்கள் அதிர்ச்சியையும் இரங்கல்களையும் தெரிவித்து வருகின்றனர்.

’கண்ணா லட்டு தின்ன ஆசையா’ படம் மூலம் திரையுலகில் அறிமுகமான சேதுராமன், அதன்பின்னர் ‘வாலிப ராஜா’, ‘சக்க போடு போடு ராஜா’ மற்றும் 50/50’ போன்ற படங்களில் நடித்துள்ளார்.

More News

வீட்டில் இருந்தால் மட்டும் தீர்வாகாது: கமல்ஹாசன்

கொரோனா வைரஸிலிருந்து நாட்டு மக்களை பாதுகாக்க கடந்த இரண்டு நாட்களாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்கப்பட்டு வருகிறது. மக்கள் ஊரடங்கு உத்தரவை பொறுமையுடன் கடைப்பிடித்து,

வெளியில் செல்லாதீர்கள்.. நாம் விடுமுறையில் இல்லை..! சச்சின் டெண்டுல்கர்.

இது விடுமுறை இல்லை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  மக்கள் எல்லோரும் வெளியில் செல்வதை நான் காணமுடிகிறது.

ஏஆர் ரஹ்மான் எடுத்த அதிர்ச்சி முடிவு: ரசிகர்கள் கவலை 

கொரோனா வைரஸ் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதும் மிக வேகமாக பரவி மனித இனத்திற்கே சவாலாக இருந்து வரும் நிலையில் உலகில் உள்ள அனைத்து மக்களும் பயணத்தை தவிர்க்க வேண்டும்

விமானத்திற்குள் வந்து சுற்றிப் பார்த்த புறா..! வைரல் வீடியோ.

பயணி ஒருவர் வீடியோ எடுத்து இணையத்தில் பதிவேற்றியுள்ளார். மிகுந்த போராட்டத்திற்கு பிறகு விமானத்தின் திறந்து புறா வெளியே அனுப்பப்பட்டது.

இரண்டு பக்கமும் தவறு உள்ளது. வரலட்சுமி சரத்குமார்

கொரோனா வைரஸ் தீவிரமாக பரவுவதை தடுக்க பொதுமக்கள் அனைவரும் தங்களுடைய வீட்டிலேயே இருந்து ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும் என மத்திய அரசும்,