close
Choose your channels

விமானம் ஓட்டும் தமிழ் நடிகர்: வைரல் வீடீயோ

Saturday, May 7, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் நடிகர் ஒருவர் விமானம் ஓட்டும் வீடியோ இணையதளங்களில் மிக வேகமாக வைரலாகி வருகிறது

தமிழ் நடிகர்களில் அஜித் மட்டுமே விமானம் ஓட்டும் லைசென்ஸ் வைத்திருப்பதாகவும் அவர் விமானத்தை சர்வசாதாரணமாக ஓட்டுவார் என்றும் கூறப்படுவதுண்டு. அதேபோல் நடிகை மாதவியும் விமானம் ஓட்டும் லைசென்ஸ் பெற்று உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியானது.

இந்த நிலையில் தற்போது நடிகர் வினய், விமானம் ஓட்டும் வீடியோ அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த வீடியோ மிகப்பெரிய அளவில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவுக்கு வினய்யை திருமணம் செய்ய போகும் நடிகை விமலா ராமன், உங்கள் கனவு நிஜமாகிவிட்டது என்று கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தமிழ் திரையுலகில் கடந்த 2007ஆம் ஆண்டு ’உன்னாலே உன்னாலே’ என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானவர் வினய். அதன் பிறகு ’ஜெயம்கொண்டான்’ ’மிரட்டல்’ ’என்றென்றும் புன்னகை’ உட்பட பல திரைப்படங்களில் நடித்த வினய், மிஷ்கின் இயக்கிய ’துப்பறிவாளன்’ என்ற திரைப்படத்தில் வில்லனாக மிரட்டினார். அதன்பின்னர் ’டாக்டர்’ ’எதற்கும் துணிந்தவன்’ ஆகிய படங்களிலும் வில்லனாக நடித்தார் என்பதும் தற்போதும் ஒரு சில படங்களில் வில்லனாக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.