close
Choose your channels

சென்னை தி.நகர் தீ விபத்தில் சிக்கிய தமிழ் நடிகர்: நூலிழையில் உயிர் பிழைத்ததாக தகவல்!

Sunday, February 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை பாண்டிபஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்ட நிலையில் இந்த தீவிபத்தில் தமிழ் நடிகர் ஒருவர் சிக்கியதாகவும் அவர் நூலிழையில் உயிர் பிழைத்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை தி நகர் பாண்டிபஜாரில் உள்ள வணிக வளாகம் ஒன்றில் இன்று திடீரென தீ பிடித்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேனாம்பேட்டை தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர்

இந்த நிலையில் இந்த வணிக வளாகத்தில் மூன்றாவது தளத்தில் இருந்த 70 பேர்களில் ஒருவர் தமிழ் நடிகர் ஸ்ரீ என்பது தற்போது தெரிய வந்துள்ளது. தீயணைப்பு மற்றும் காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு எங்களை உயிருடன் காப்பாற்றியதாக அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார். சென்னை வணிக வளாகத்தில் நடந்த தீ விபத்தில் நூலிழையில் தமிழ் நடிகர் ஒருவர் உயிர் பிழைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.