close
Choose your channels

கொரோனாவுக்கு பலியான விஜய் படத்தில் அறிமுகமான நடிகர்: திரையுலகினர் இரங்கல்

Tuesday, September 15, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனாவுக்கு அப்பாவி பொதுமக்கள் மட்டுமின்றி எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள், தொழிலதிபர்கள் உள்பட பலரும் பாதிக்கப்பட்டுள்ளனர். அதேபோல் திரையுலகைச் சேர்ந்த ஒரு சிலரும் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தளபதி விஜய் படத்தில் அறிமுகமாகி பல திரைப்படங்களில் நடித்த நடிகர் ஒருவர் கொரோனாவுக்கு பலியாகி இருப்பதாக வெளிவந்த செய்தி திரையுலகினரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தளபதி விஜய் நடித்த ’புதிய கீதை’ என்ற திரைப்படத்தில் நடிகராக அறிமுகமாகி அதன் பின்னர் கும்கி, கயல், தொடரி, முப்பரிமாணம் உள்பட பல படங்களில் நடித்தவர் நடிகர் ப்ளோரன்ட் பெரைரா. இவர் நேற்று சென்னையில் கொரோனா பாதிப்பு காரணமாக காலமானார். அவருக்கு வயது 67. ப்ளோரன்ட் பெரைரா மறைவை அடுத்து அவருக்கு திரையுலகினர் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேலும் இவர் நடிகர் மட்டுமின்றி மூத்த ஊடகவியலாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.