close
Choose your channels

நாளை ரிலீஸாக இருந்த முன்னணி நடிகரின் பட ரிலீஸ் ஒத்திவைப்பு:புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு!

Thursday, September 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவரின் படம் நாளை ரிலீஸ் ஆக இருந்த நிலையில் அந்த படத்தின் ரிலீஸ் தேதி சென்சார் பணி காரணமாக தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன.

பிரபல நடிகர் அரவிந்த்சாமி இயக்கத்தில் ஃபெல்லினி என்பவரது இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ’ரெண்டகம்’. இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து ரிலீசுக்கு தயாரான நிலையில் செப்டம்பர் 2ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் என கடந்த சில நாட்களுக்கு முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் சென்சார் பணி தாமதமாவதை அடுத்து ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் புதிய ரிலீஸ் தேதி செப்டம்பர் 16 என்பது குறிப்பிடப்பட்டது.

அரவிந்த்சாமி, குஞ்சாக்கோ போபன், ஜாக்கி ஷெராப் உள்பட பலர் நடித்துள்ள இந்த படம் கௌதம் சங்கர் ஒளிப்பதிவில், அப்பு என். பட்டதாரி படத்தொகுப்பில் அருள்ராஜ் கென்னடி இசையில் உருவாகியுள்ளது. இந்த படம் அரவிந்த்சாமியின் வெற்றி படங்களில் ஒன்றாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.