மனைவி, குழந்தைகளுடன் இயற்கை விவசாயம் செய்யும் தமிழ் நடிகர்.. வைரல் புகைப்படங்கள்..!

  • IndiaGlitz, [Monday,March 20 2023]

தமிழ் திரை உலகினர் தாங்கள் சம்பாதித்த பணத்தை ஹோட்டல், ஐடி, பங்குச்சந்தை உள்பட பல்வேறு இடங்களில் முதலீடு செய்து வரும் நிலையில் பிரபல நடிகர் ஒருவர் இயற்கை விவசாயம் செய்து வருவதாக வெளிவந்திருக்கும் தகவல் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

தனுஷ் நடித்த ’பொல்லாதவன்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் நடிகர் கிஷோர். அதன் பிறகு அவர் ’ஜெயங்கொண்டான்’ ’சிலம்பாட்டம்’ ’வெண்ணிலா கபடி குழு’ ’போர்க்களம்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார் என்பதும் சமீபத்தில் வெளியான ’பொன்னியின் செல்வன்’ ’சார்பாட்டா பரம்பரை’ உள்பட அவர் நடித்த படங்கள் பல படங்கள் வெற்றியாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தனது கல்லூரி கால தோழியான விசாலட்சுமி என்பவரை திருமணம் செய்து கொண்ட கிஷோருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் படப்பிடிப்பு போக மீதம் உள்ள நேரங்களில் அவர் தனது குடும்பத்துடன் இயற்கை விவசாயத்தில் ஈடுபடுவதில் மிகுந்த விருப்பம் கொண்டவர். அதுமட்டுமின்றி தனது குழந்தைகளுக்கும் அவர் இயற்கை விவசாயத்தின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுத்து வளர்த்து வருகிறார்.

லாப நோக்கத்திற்காக இல்லாமல் இந்த இயற்கை விவசாயத்தை தான் செய்து வருவதாக பல பேட்டிகளில் கிஷோர் கூறியுள்ளார். மேலும் பெங்களூரில் இயற்கை விவசாயத்தில் விளைந்த பொருட்களை விற்பனை செய்யும் கடையும் வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. நடிகர் கிஷோர் தனது மனைவி மகன்களுடன் இயற்கை விவசாயம் செய்யும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

More News

10 ஆண்டுகளுக்கு முன் காளையன் இப்படியா இருந்தார்? ஆச்சரிய புகைப்படங்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் குக் வித் கோமாளி என்ற நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது என்பதும் கடந்த சில வாரங்களாக இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் விறுவிறுப்பாக

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் போலீசில் புகார். திடுக்கிடும் குற்றச்சாட்டு..!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் காவல்துறையில் புகார் அளித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

'த்ரிஷயம்' ரீமேக் 'பாபநாசம் 2' படத்திற்கு முன்பே 'பாபநாசம் 3' ரிலீஸ் ஆகிறதா?

மோகன்லால் நடிப்பில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் உருவான 'த்ரிஷயம்' திரைப்படம் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியானது என்பதும் இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் தெரிந்ததே.

விஷால் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ராகவா லாரன்ஸ்?

விஷால் நடித்த வெற்றி படத்தை இயக்கிய இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

பிரபல தயாரிப்பாளர் மகளை காதலிக்கின்றாரா நடிகர் அசோக் செல்வன்? எப்போது திருமணம்?

பிரபல தயாரிப்பாளர் மகளை நடிகர் அசோக் செல்வன் காதலித்து வருவதாகவும் விரைவில் திருமணம் நடைபெற இருப்பதாகவும் கூறப்படுகிறது.