பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் 'லவ் டுடே' படத்திற்காக வருத்தப்படுவார்: தனுஷ் பட நடிகர் பேட்டி..!

  • IndiaGlitz, [Saturday,February 18 2023]

கடந்த ஆண்டு வெளியான ’லவ் டுடே’ திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்ற நிலையில் இந்த படத்தின் 100-வது நாள் விழா சமீபத்தில் கொண்டாடப்பட்டது என்பதும் இதில் பிரதீப் ரங்கநாதன், இவானா, அர்ச்சனா கால் பாதி உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்ட புகைப்படங்கள் வைரலானது என்பதையும் பார்த்தோம்.

இந்த நிலையில் ’லவ் டுடே’ படத்தை பல திரையுலக பிரபலங்கள் பாராட்டிய நிலையில் தனுஷ் நடித்த ’யாரடி நீ மோகினி’ என்ற திரைப்படத்தில் அவருக்கு நண்பனாக நடித்தவரும் ஸ்டாண்ட் அப் காமெடியுமான கார்த்திக் குமார் இந்த படம் குறித்து கடுமையான விமர்சனம் செய்து உள்ளார்.

இது குறித்து அவர் அளித்துள்ள பேட்டியில் ’10 ஆண்டுகளுக்குப் பிறகு ’லவ் டுடே’ படத்தை இயக்கியதற்காக பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் கண்டிப்பாக வருத்தப்படுவார் என்று கூறியுள்ளார். ‘அடிடா அவளை, உதைடா அவள’ என்ற பாடலை உருவாக்கியதற்காக செல்வராகவன் நீண்ட காலத்திற்கு பிறகு வருத்தப்பட்டார் என்றும் அதேபோல் ’லவ் டுடே’ படத்தை இயக்கியதற்காக நிச்சயம் பிரதீப் ரங்கநாதன் ஒருநாள் வருத்தப்படுவார் என்று கூறியுள்ளார்.

இந்த படம் பெண்களை மட்டம் தட்டிய ஒரு படம் என்றும், ஒரு ஆண் முன்னோக்கு கதை என்றும் பெண் வெறுப்புணர்ச்சி குறித்த படத்தை எடுத்து விட்டோமே என்று அவர் நிச்சயம் ஒரு நாள் வருதப்படுவார் என்று கூறியுள்ளார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

'லியோ' காஷ்மீர் படப்பிடிப்பில் இவ்வளவு குளிரா? நடுக்கத்தில் படக்குழுவினர்..!

தளபதி விஜய் நடித்து வரும் 67வது திரைப்படமான 'லியோ' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில நாட்களாக காஷ்மீரில் நடைபெற்று வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். விஜய், த்ரிஷா, பிரியா ஆனந்த், கெளதம்

ஹிப்ஹாப் தமிழா ஆதியை கயிற்றால் கட்டி வைத்த படக்குழு.. வைரல் வீடியோ..!

தமிழ் திரை உலகின் இளைய தலைமுறை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஹிப்ஹாப் தமிழாவை படக்குழுவினர் கயிற்றால் கட்டி வைத்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

சமந்தாவுக்கு இது தேவையில்லை, உடனடியாக நிறுத்த வேண்டும்.. சக நடிகர் அறிவுரை..!

நடிகை சமந்தா கடந்த சில நாட்களாக மிகவும் கடினமான உடற்பயிற்சி செய்யும் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வரும் நிலையில் இவ்வளவு கடினமான உடற்பயிற்சி செய்வதை சமந்தா உடனே நிறுத்த

பிரபல இயக்குனரின் படத்தில் இருந்து விலகிட்டாரா விஜய்சேதுபதி? என்ன காரணம்?

பிரபல இயக்குனரின் அடுத்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருப்பதாக சமீபத்தில் புகைப்படத்துடன் ஒரு செய்தி வெளியான நிலையில் தற்போது அந்த படத்தில் இருந்து அவர் விலகி விட்டதாக கூறப்படுகிறது.

இது அப்பட்டமாக சமுதாயத்திற்கு தீங்கிழைக்கக் கூடிய செயல்: 'துணிவு' படம் குறித்து பாஜக பிரமுகர்

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் சமீபத்தில் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகியிருக்கும் நிலையில் இந்த படத்தில் சென்சார் அதிகாரிகளால் நீக்கப்பட்ட காட்சிகள், மியூட் செய்யப்பட்ட வசனங்கள் இடம்பெற்றுள்ளன.