காதலர் தினத்தில் விவாகரத்து செய்த தமிழ் நடிகர்

  • IndiaGlitz, [Thursday,February 15 2018]

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பான 'கனா காணும் காலங்கள்' என்னும் தொடரில் நடித்து பின்னர் பெரிய திரைக்கு அறிமுகமான நடிகர் யுதன் பாலாஜி. இவர் லிங்குசாமியின் பட்டாளம், பூபதி பாண்டியனின் 'காதல் சொல்ல வந்தேன்', மற்றும் நகர்வலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில் நேற்றைய காதலர் தினத்தை காதலர்களும், காதலித்து திருமணம் செய்தவர்களும் சந்தோஷமாக கொண்டாடிய நிலையில் நடிகர் யுதன்பாலாஜி தனது மனைவியை விவாகரத்து செய்ய நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் தெரிவித்துள்ளார். இருவரும் இணைந்து எடுத்த முடிவு தான் இது என்றும், இருப்பினும் காதலர் தினத்தை சந்தோஷமாக கொண்டாடுவதாகவும் தெரிவித்துள்ளார்.

நடிகர் யுதன் பாலாஜி கடந்த 2016ஆம் ஆண்டு ஜூன் மாதம் ப்ரித்தி என்பவரை திருமணம் செய்தார் என்பதும் திருமணமான ஒன்றரை வருடத்தில் கருத்துவேறுபாடு ஏற்பட்டு இருவரும் பிரிகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.