வில்ஸ்மித் மனைவிக்கு இருந்த அதே பிரச்சனை தமிழ் நடிகைக்கும் இருந்ததா? அதிர்ச்சி தகவல்

ஹாலிவுட் நடிகர் வில்ஸ்மித் மனைவிக்கு இருந்த அலோபீசியா என்ற நோய் தமிழ் நடிகைக்கும் இருந்ததாக வெளியாகி இருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சமீபத்தில் ஆஸ்கார் விருது வழங்கும் விழா நடைபெற்றது என்பதும் இந்த விழாவில் சிறந்த நடிகருக்கான விருதை வில் ஸ்மித் வாங்கினார் என்பது தெரிந்ததே. இந்த விருது வழங்கும் விழாவில் தொகுப்பாளர் கிரிஸ் ராக், வில்ஸ்மித் மனைவி குறித்து சர்ச்சைக்குரிய கருத்து கூறிய போது ஆத்திரமடைந்த வில்ஸ்மித் அவரது கன்னத்தில் ஓங்கி அறைந்தார். அதாவது வில்ஸ்மித் மனைவிக்கு அலோபீசியா என்ற நோய் இருந்த காரணத்தினால் அவரது தலைமுடி கொட்டி மொட்டையாக இருந்ததை கிறிஸ் ராக் கேலி செய்திருந்தார். அதனால் ஆத்திரமடைந்த வில்ஸ்மித் அவரது கன்னத்தில் ஓங்கி அடித்தார்.

இந்த நிலையில் வில்ஸ்மித் மனைவிக்கு இருந்த அதே பிரச்சனை தனக்கும் இருந்ததாக தமிழ் நடிகை சமீரா ரெட்டி தெரிவித்திருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அஜித் நடித்த அசல், மாதவன் நடித்த வேட்டை, சூர்யா நடித்த வாரணம் ஆயிரம் உள்பட பல திரைப்படங்களில் நடித்திருந்த சமீராரெட்டி, அலோபீசியா நோய் தனக்கும் சில ஆண்டுகளுக்கு இருந்ததாகவும், இந்த நோய் காரணமாக தனக்கும் முடி கொட்டியது என்றும், அதன் பிறகு சிகிச்சை எடுத்துக் கொண்ட பிறகு பிரச்சனை சரியாகிவிட்டதாகவும் தனது இன்ஸ்டாகிராமில் தெரிவித்துள்ளார். தற்போது தனக்கு நீண்ட தலைமுடி காணப்பட்டாலும் இந்த நோய் தனக்கு மீண்டும் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் அவர் கூறியுள்ளது ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

More News

ரஜினி படத்தை நெல்சன் இயக்க விஜய் காரணமா? 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் அடுத்த படமான 'தலைவர் 169' திரைப்படத்தை இயக்குனர் நெல்சன் இயக்க உள்ள நிலையில் இந்த வாய்ப்பு கிடைத்ததே தளபதி விஜய்யால்தான் என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது. 

ஒருநாள் முன்னதாகவே ரிலீஸாகும் 'பீஸ்ட்': அதிரடி அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்' திரைப்படம் ஏப்ரல் 13-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரம்மாண்டமாக வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தின் புரமோஷன் பணிகளை சன் பிக்சர்ஸ்

ரூ.15 லட்சத்திற்காக சேற்றில் கட்டிப்புரளும் ஸ்ருதி-ஜூலி!

பிக்பாஸ்  அல்டிமேட் நிகழ்ச்சி 14 போட்டியாளர்களுடன் தொடங்கி அதன் பின் சில வைல்ட்கார்ட் போட்டியாளர்களுடன் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் தற்போது இந்த நிகழ்ச்சி இறுதி கட்டத்தை நெருங்கி உள்ளது .

சிங்கம், புலி, நரி, நாய் முகமூடியை போலீஸ்ல்ல கொடுத்துருவாங்க: 'டாணாக்காரன்' டிரைலர்

 நடிக்கும் விக்ரம் பிரபு நடித்த 'டாணாக்காரன்'  என்ற படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு கிடைத்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டு நிமிட ட்ரெய்லர்

அதிகாலை 5 மணிக்கு வெள்ளை வேஷ்டி, துண்டுடன் அஜித்: வைரல் புகைப்படங்கள்!

நடிகர் அஜித் அதிகாலை 5 மணிக்கு கேரளாவில் உள்ள கோவிலுக்கு வெள்ளை வேஷ்டி மற்றும் துண்டுடன் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.