குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் பீச்சில் பிகினி போட்டோஷூட்: நடிகையின் வீடியோ வைரல்!

  • IndiaGlitz, [Wednesday,July 20 2022]

தமிழ் நடிகை ஒருவருக்கு கடந்த மாதம் குழந்தை பிறந்த நிலையில் தற்போது அவர் பீச்சில் பிகினி உடையுடன் கூடிய போட்டோஷூட் வீடியோவை பதிவு செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா நடித்த ’மாஸ்’ மற்றும் கார்த்தி நடித்த ’சகுனி’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் கன்னடம் தெலுங்கு படங்களிலும் நடித்தவர் நடிகை பிரணிதா சுபாஷ். இவர் கடந்த ஆண்டு மே மாதம் தொழில் அதிபர் பிரஜித் என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் கடந்த ஜூன் மாதம் இவருக்கு பெண் குழந்தை பிறந்தது. இவர் தனது குழந்தையின் புகைப்படங்களை அவ்வப்போது தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்து வருகிறார்.

இந்த நிலையில் சமீபத்தில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார். அதில் அவர் பிகினி உடையுடன் பீச்சில் நடந்து வருவது போன்ற காட்சி உள்ளது. இந்த வீடியோவுக்கு 2 லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸ் மற்றும் நூற்றுக்கணக்கான கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது. குழந்தை பிறந்த ஒரே மாதத்தில் நடிகை பிரணிதா சுபாஷ் பிகினி உடையுடன் கூடிய வீடியோவை பதிவு செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

More News

மாஸ் நடிகர்களுக்கு இணையாக 4 மணி காட்சி: அசத்தும்  'தி லெஜண்ட்' திரைப்படம்!

 தமிழகத்தை பொறுத்தவரை மாஸ் நடிகர்களுக்கு மட்டுமே அதிகாலை 4:00 காட்சிகள் திரையிடப்படும் நிலையில் அறிமுக நடிகரான அருள் சரவணன் நடித்துள்ள 'தி லெஜண்ட்' திரைப்படம் 4 மணி காட்சி

படத்தை விமர்சனம் செய்ய ரூ.3 லட்சம் கேட்டாரா புளுசட்டை மாறன்? பார்த்திபனின் ஆடியோ வைரல்!

பிரபல திரைப்பட விமர்சகர் புளுசட்டை மாறன் படத்தை விமர்சனம் செய்ய மூன்று லட்ச ரூபாய் ஒரு தயாரிப்பாளரிடம் கேட்டதாக நடிகர் இயக்குனர் பார்த்திபன் ஆடியோ ஒன்றில்

ஓடிடியில் வெளியாகும் தமன்னாவின் அடுத்த படம்: அதிகாரபூர்வ அறிவிப்பு!

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான தமன்னாவின் அடுத்த திரைப்படம் ஹாஸ்டார் ஓடிடியில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

மாதவனின் 'ராக்கெட்டரி' ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு!

நடிகர் மாதவன் நடித்து தயாரித்து இயக்கிய 'ராக்கெட்டரி' திரைப்படம் ஜூலை 1ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பது தெரிந்ததே.

திடீரென கெட்டப் மாறிய செல்வராகவன்: ஹீரோ போல் அசத்தும் புகைப்படங்கள்!

பிரபல இயக்குனர் செல்வராகவன் திடீரென கெட்டப் மாறிய புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஆச்சரியமடைந்தனர்.