close
Choose your channels

தந்தையின் 70வது பிறந்த நாளை வித்தியாசமாக கொண்டாடிய புன்னகை அரசி நடிகை!

Saturday, July 30, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் புன்னகை அரசி என்று போற்றப்படும் நடிகை சினேகா தனது தந்தையின் 70வது பிறந்த நாள் கொண்டாட்டம் குறித்த புகைப்படங்களை தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

நடிகை சினேகாவின் தந்தை ராஜாராம் அவர்களின் 70வது பிறந்த நாளை முன்னிட்டு இந்த பிறந்தநாளை அவர் குழந்தைகள் காப்பகத்தில் கொண்டாட சினேகா முடிவு செய்தார். இதனையடுத்து சென்னை ரெட் ஹில்ஸ் பகுதியில் குழந்தை காப்பகத்திற்கு தந்தையை அழைத்து சென்று அங்கு அவர் பிறந்த நாள் கேக் வெட்டி கொண்டாடினார். மேலும் அங்கிருந்த குழந்தைகள் அனைவருக்கும் பிரியாணி வழங்கி இந்த பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது

சினேகாவின் இரண்டு குழந்தைகளும் இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இது குறித்த புகைப்படங்கள், வீடியோக்களை சினேகா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ள நிலையில் இந்த புகைப்படங்களுக்கு பாசிட்டிவ் லைக்ஸ், கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.