பெயரை மாற்றி தமிழ் கலாச்சாரத்தில் இணைந்த நடிகை: குவியும் பாராட்டுக்கள்!

  • IndiaGlitz, [Wednesday,June 22 2022]

தமிழ் திரைப்பட நடிகை ஒருவர் தனது பெயரை மாற்றி தமிழ் கலாச்சாரத்தில் இணைந்து உள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இந்தியா முழுவதும் பெயருக்கு பின்னால் தங்களது சாதியின் அடையாளத்தை வைத்துக் கொள்ளும் நபர்களின் எண்ணிக்கை மிக அதிகமாக உள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் கடந்த 50 ஆண்டுகளாக பெயருக்கு பின்னால் ஜாதி அடையாளத்தை பின்பற்றும் போக்கு முற்றிலும் நீங்கி விட்டது என்பதும் தமிழகத்தில் உள்ளவர்கள் யாரும் தங்களது ஜாதியை பெயருக்கு பின்னால் தற்போது குறிப்பிடுவது இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஜாதி குறித்த விழிப்புணர்ச்சி காரணமாகவே தமிழர்கள் இந்த வழியை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகின்றனர். அந்த வகையில் தமிழ் திரைப்பட நடிகை மற்றும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான ஜனனி அய்யர் தனது பெயரை ஜனனி என்று மாற்றிக்கொண்டார்.

இனிமேல் அய்யர் என்ற பெயர் தன்னுடைய பெயருக்கு பின்னால் இருக்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஜாதி அடையாளத்தை தன்னுடைய பெயருக்கு பின்னால் இருந்து நீக்கிய ஜனனி, தமிழ் கலாச்சாரத்தில் இணைந்துள்ளார் என்று அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

மகன்களுடன் தனுஷ் ஜாலியாக என்ன செய்கிறார் தெரியுமா? வைரல் புகைப்படம்

தமிழ் திரை உலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ் நடிப்பில் உருவான 'தி க்ரே மேன்', 'திருச்சிற்றம்பலம்' 'வாத்தி' , 'நானே வருவேன்' ஆகிய திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன

விஜய் ரசிகர்களுக்கு இன்று டபுள் விருந்து: 'வாரிசு' படக்குழு அறிவிப்பு!

தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று வெளியானது என்பதும் இந்த போஸ்டர் நேற்று இணையதளங்களில் மிகப்பெரிய அளவில் வைரல் ஆனது என்பதும் தெரிந்ததே. 

பழையபடி கேப்டனாக கர்ஜிக்க வேண்டும்: ரஜினிகாந்த் பிரார்த்தனை

 கேப்டன் விஜயகாந்த் பழைய கேப்டனாக மீண்டும் கர்ஜிக்க வேண்டும் என சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் தனது டுவிட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ரஜினிக்கும் சத்யராஜூக்கும் என்ன பிரச்சனை: உண்மையை உடைத்த சிபிராஜ்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்துக்கும் சத்யராஜூக்கும் இடையே பிரச்சனை இருப்பதாக கோலிவுட் திரையுலகில் அடிக்கடி வதந்திகள் பரவி வரும் நிலையில் இதுகுறித்து நடிகர் சிபிராஜ் விளக்கம் அளித்துள்ளார்.

மாஸ் நடிகரின் படத்தில் இருந்து தூக்கப்பட்டாரா ராஷ்மிகா மந்தனா: ரசிகர்கள் அதிர்ச்சி!

மாஸ் நடிகரின் அடுத்த படத்தில் ராஷ்மிகா மந்தனா தூக்கப்பட்டதாக வெளிவந்திருக்கும் செய்தி அவரது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.