கிஷோர் கே ஸ்வாமி கைதுக்கு கண்டனம் தெரிவித்த தமிழ் நடிகை!

  • IndiaGlitz, [Monday,June 14 2021]

பிரபல அரசியல் விமர்சகர் மற்றும் சமூக வலைதள பயனாளி கிஷோர் கே ஸ்வாமி இன்று காலை கைது செய்யப்பட்டார் என்பதும் அவரை 14 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டதை அடுத்து செங்கல்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னாள் முதல்வர்கள் பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி மற்றும் இந்நாள் முதல்வர் முக ஸ்டாலின் உள்பட பல தலைவர்களை கிஷோர் கே ஸ்வாமி தனது சமூக வலைப்பக்கத்தில் அவதூறாக பேசியதாக திமுக ஐடி விங் கொடுத்த புகாரின் அடிப்படையில் கிஷோர் கே ஸ்வாமி கைது செய்யப்பட்டார். அவரது கைதுக்கு பாஜகவினர் தங்களது கண்டனத்தை தெரிவித்துக் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தநிலையில் தமிழ் நடிகையும் பாஜக பிரபலமுமான காயத்ரி ரகுராம் தனது ட்விட்டர் பக்கத்தில் கிஷோர் கே ஸ்வாமி கைதுக்கு தனது கண்டனத்தை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியதாவது:

கிஷோர் கே ஸ்வாமி திமுக தலைவர்களை விமர்சித்த காரணத்திற்காக கைது செய்துள்ளதற்கு எனது கண்டனம். ஜனநாயகம் எங்கே இருக்கின்றது? பிரதமர் குறித்து ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் இருவரும் பொய்யாக பேசுகிறார்கள்,. இந்து தர்மம், பிராமணர்கள் பற்றி திருமாவளவன் தவறாக பேசும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று காயத்ரி ரகுராம் தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார்.

More News

இளைஞருடன் டூயட் பாடிய தாடி பாலாஜி மனைவி நித்யா: தட்டிக்கேட்டவருக்கு கொடுத்த பதிலடி!

தமிழ் சினிமாவின் காமெடி நடிகர்களில் ஒருவரான தாடி பாலாஜிக்கும் அவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளாக கருத்து வேறுபாடு ஏற்பட்டதை அடுத்து இருவரும் பிரிந்து வாழ்கின்றனர்.

ஐதராபாத்தை நோக்கி படையெடுக்கும் விஷால் படக்குழு: காரணம் இதுதான்!

கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு குறைந்து கொண்டே வருகிறது என்பதும் இதனால் தமிழக அரசு ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளில் அறிவித்து கொண்டு வருகிறது

'தி ஃபேமிலிமேன் 2' வெற்றி எதிரொலி: நயன்தாராவை மிஞ்சிய சமந்தாவின் சம்பளம்?

சமீபத்தில் அமேசான் ஓடிடியில் வெளியான சமந்தா நடித்த 'தி ஃபேமிலிமேன் 2' என்ற வெப்தொடர் சில சர்ச்சைகளை ஏற்படுத்தி இருந்தாலும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பு பெற்றது

கலைப்புலி எஸ் தாணு தயாரிப்பில் 2 படங்களில் நடிக்கும் மாஸ் நடிகர்!

தமிழ் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர் கலைப்புலி தாணு என்பதும் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஜய் உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களை இவர் தயாரித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

ஆபாச பேச்சு, அதிகார மிரட்டல்....! யார் இந்த பப்ஜி மதன்...?

மதன் குமார் மாணிக்கம் என்பது இவரோட முழுப்பெயராகும். சிவில் எஞ்சினியரிங் முடித்த இளைஞர், பணக்கராக வீட்டு பையன் என்றும் சொல்லலாம்.