close
Choose your channels

கைக்குழந்தையுடன் மழையில் நனைந்து செமஆட்டம் ஆட்டம் போடும் நடிகை: வீடியோ வைரல்

Friday, July 1, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவர் கைக்குழந்தையுடன் மழையில் நனைந்து ஆட்டம் போடும் வீடியோவை பதிவு செய்துள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த ’சிவாஜி’ தளபதி விஜய் நடித்த ’அழகிய தமிழ் மகன்’ விக்ரம் நடித்த ’கந்தசாமி’ தனுஷ் நடித்த ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்பட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண்.

ரஷ்யாவை சேர்ந்த கோஸ்ச்சீவ் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்ட ஸ்ரேயாவுக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அழகான பெண் குழந்தை பிறந்தது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது தனது குழந்தையுடன் இருக்கும் புகைப்படத்தை பதிவு செய்து வருவார் என்பதும் அந்த புகைப்படங்கள் வைரலாகும் என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் தனது கைக்குழந்தையுடன் மழையில் நனைந்து கொண்டே ஆட்டம் போடும் வீடியோவை ஸ்ரேயா தனது இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவுக்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

ஜெயம் ரவியுடன் ’மழை’ என்ற திரைப்படத்தில் நடித்த ஸ்ரேயா சரண் அந்த படத்தில் மழையில் செம ஆட்டம் போட்டு இருப்பார். அதற்கு ஆட்டத்திற்கு இணையாக இந்த ஆட்டமும் உள்ளது என ரசிகர்கள் கமெண்ட்ஸ் பகுதியில் பதிவு செய்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.