close
Choose your channels

திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்த தமிழ் நடிகை: வைரலாகும் நிச்சயதார்த்த புகைப்படங்கள்

Saturday, March 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் என தென்னிந்திய மொழிகளில் நடித்த நடிகை ஒருவர் தனது திருமண அறிவிப்பை அதிகாரபூர்வமாக அறிவித்து நிச்சயதார்த்த புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.

இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் நடிகராக அறிமுகமான ’டார்லிங்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. அதன் பின்னர் இவர் தமிழ் தெலுங்கு மலையாளம் கன்னடம் என பல திரைப்படங்களில் நடித்தார் .

இந்த நிலையில் யாகாவாராயினும் நாகாக்க’ 'மரகத நாணயம்’ உள்ளிட்ட படங்களில் தன்னுடன் நடித்த நடிகர் ஆதியை நிக்கி கல்ராணி காதலித்து வருவதாகவும் இருவருக்கும் விரைவில் திருமணம் என்றும் செய்திகள் வெளியானது.



இந்த செய்தியை உறுதிப்படுத்தும் வகையில் நிக்கிகல்ராணி தனது நிச்சயதார்த்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். மார்ச் 24ஆம் தேதி தனக்கும் ஆதிக்கும் நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகவும், இந்த நிச்சயதார்த்தம் இரு தரப்பு குடும்பத்தின் ஆசீர்வாதத்துடன் நடந்தது என்றும் பதிவு செய்துள்ளார். மேலும் இந்த புதிய பயணத்திற்கு உங்களுடைய அன்பும் ஆசீர்வாதமும் தேவை என்றும் அவர் பதிவு செய்துள்ளார். இதனையடுத்து திரையுலகின் மற்றொரு ஜோடியான ஆதி நிக்கி கல்ராணிக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.