close
Choose your channels

செல்ல நாய்க்குட்டியுடன் விமான பயணம் செய்யும் பிரபல தமிழ் நடிகை: வைரல் வீடியோ

Sunday, June 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தனது செல்ல நாய் குட்டியுடன் விமான பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அவை மிகப் பெரிய அளவில் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகின்றன.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கீர்த்தி சுரேஷ். விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார் என்பதும் ’நடிகையர் திலகம்’ என்ற திரைப்படத்தில் சிறப்பாக நடித்ததற்காக தேசிய விருது பெற்றுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் குறிப்பாக இன்ஸ்டாகிராமில் ஆக்டிவ்வாக இருக்கும் கீர்த்தி சுரேஷூக்கு 13 மில்லியனுக்கும் அதிகமான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பதும் இவரது ஒவ்வொரு பதிவும் மிகப்பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெறும் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தனது செல்ல நாய் குட்டி உடன் விமான பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை வெளியிட்டு உள்ளார். இந்த இந்த வீடியோவுக்கு 5 லட்சத்துக்கும் மேற்பட்ட லைக்ஸ்கள் கிடைத்துள்ளது.

இந்த நிலையில் நடிகை கீர்த்தி சுரேஷ், உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகும் ‘மாமன்னன்’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். அதுமட்டுமின்றி சிரஞ்சீவியுடன் ஒரு தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார் என்பது ‘போலோ சங்கர்’ என்ற இந்த படம் தமிழில் சூப்பர் ஹிட் பெற்ற அஜித்தின் ’வேதாளம்’ படத்தின் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.