தமிழக முதல்வர் மனைவியிடம் இருந்து விருது வாங்கிய தமிழ் நடிகை: வைரல் புகைப்படங்கள்

  • IndiaGlitz, [Monday,May 02 2022]

தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் அவர்களிடம் இருந்து தமிழ் நடிகை ஒருவர் ’பவர் ஆப் வுமன்’ என்ற விருதைப் பெற்றுள்ள நிலையில் இது குறித்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாக வருகின்றன.

தமிழ் திரையுலகில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக இருந்தவர் சிம்ரன். அஜித், விஜய், சூர்யா உள்பட பல பிரபலங்களுடன் இவர் பல வெற்றி படங்களில் நடித்துள்ளார் என்பதும் தற்போதும் சில படங்களில் நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் ’பவர் ஆஃப் வுமன்’ என்ற விருதை தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்களின் மனைவி துர்கா ஸ்டாலின் இருந்து பெற்ற சிம்ரன் பெருமையுடன் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். இதுகுறித்து அவர் கூறியபோது, ‘துர்கா ஸ்டாலின் அவர்களிடமிருந்து ’பவர் ஆப் உமன்’ என்ற விருதை பெற்றதைவிட சிறந்தது வேறு எதுவும் இருக்க முடியாது என்றும், அவருடைய எளிமையான தோற்றம் மற்றும் மிக வலிமையான ஆளுமையை நான் எப்போதும் பார்த்து ரசித்து இருக்கின்றேன் என்றும், இந்த அனுபவத்தை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்’ என்று கூறியுள்ளார்.

மேலும் இந்த விருதை சாதிக்கத் துடிக்கும் அனைத்து மகளிருக்கும் அர்ப்பணிக்கிறேன் என்றும் சிம்ரன் தெரிவித்துள்ளார். இது குறித்த புகைப்படங்கள் அவரது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

More News

ஏ.ஆர்.ரஹ்மான் முன் மைக்கை தூக்கி எறிந்த பார்த்திபன்: வைரல் வீடியோ

மைக் வேலை செய்யாததால் ஆத்திரமடைந்த இயக்குனர் பார்த்திபன் ஏஆர் ரகுமான் முன்பே மைக்கை தூக்கி எறிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது .

தளபதி விஜய்யின் 'பிகில்' பட நடிகைக்கு திருமணம்: வைரல் புகைப்படங்கள்!

தளபதி விஜய் நடித்த வெற்றிப் படங்களில் ஒன்றான 'பிகில்' படத்தில் நடித்த நடிகை திருமணம் செய்து கொண்டதாக புகைப்படங்களை வெளியிட்டுள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களின் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கார்த்திக் நரேனின் அடுத்த படம் ரெடி: ரிலீஸ் எப்போது?

இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் இயக்கிய 'மாறன்' திரைப்படம் கடந்த மார்ச் மாதம் வெளியான நிலையில் தற்போது அவருடைய அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளன

1000 கோடியுடன் இந்த 350 கோடியையும் சேர்த்துக்கோங்க: 'கே.ஜி.எப் 2' வசூல் ராக்கிங்!

யாஷ் நடிப்பில் உருவான 'கேஜிஎப் 2' திரைப்படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூலித்த நிலையில் தற்போது இந்த படத்திற்கு மேலும் 350 கோடி ரூபாய் வருமானம் கிடைத்துள்ள தகவல்

'ராக்கி பாய்': யாஷ் செல்ல மகளின் க்யூட் வீடியோ!

பிரபல கன்னட நடிகர் யாஷ் நடித்த 'கேஜிஎப் 2'  திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் உலகம் முழுவதும் ஆயிரம் கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.