நீச்சல் குளத்தில் உணவு.. அந்தரத்தில் ஊஞ்சல்.. தமிழ் நடிகையின் மாலத்தீவு போட்டோஷூட்..!

  • IndiaGlitz, [Tuesday,June 20 2023]

கடந்த சில ஆண்டுகளாக தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகள் மாலத்தீவு சென்று வருகின்றனர் என்பதும் மாலத்தீவு அரசு தங்கள் நாட்டின் சுற்றுலாத் துறையை விளம்பரப்படுத்துவதற்காக நடிகைகளுக்கு இலவசமாக பயண டிக்கெட், தங்கும் இடம் ஆகியவற்றை தந்து கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

எனவே பெரிய நடிகைகள் முதல் வளர்ந்து வரும் நடிகைகள் வரை மாலத்தீவு சென்று அங்கு உள்ள சுற்றுலா பகுதிகளை புகைப்படம் எடுத்து பதிவு செய்து வருகின்றனர் என்பதும் அதுமட்டுமின்றி கிளாமரான போட்டோஷூட் புகைப்படங்களையும் பதிவு செய்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம்.

அந்த வகையில் தமிழ் திரை உலகின் நடிகைகளில் ஒருவரான காஷ்மிரா தற்போது மாலத்தீவு சென்றுள்ள நிலையில் அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மாலத்தீவில் இருக்கும் கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார்.

‘சிவப்பு மஞ்சள் பச்சை’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை காஷ்மிரா. இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது அடுத்து ஹிப்ஹாப் தமிழா நடித்த ’அன்பறிவ்’ உள்பட ஒரு சில படங்களில் நடித்தார் என்பதும் தற்போது அவர், ஹிப்ஹாப் தமிழா ஆதி நடித்து வரும் ’பிடி சார்’ படத்தின் நாயகிகளில் ஒருவராக நடித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் சுமார் இரண்டு மில்லியன் ஃபாலோயர்களை வைத்துள்ள காஷ்மீரா அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது அவர் மாலத்தீவில் இருக்கும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். அதில் அவர் நீச்சல் குளத்தில் உணவு உண்ணும் புகைப்படமும், மீன் போல் நீச்சல் உடையில் நீந்தும் வீடியோவும் வைரல் ஆகி வருகின்றன. அதேபோல் அந்தரத்தில் ஊஞ்சலில் தொங்கும் புகைப்படத்திற்கு ஏராளமான கமெண்ட்கள் பதிவாகி வருகின்றன.

More News

அதே ரத்தம்.. அப்படி தான் இருக்கும்.. சிவகார்த்திகேயன் மகனின் அசத்தல் புகைப்படம்..!

நடிகர் சிவகார்த்திகேயன் தனது இரண்டு வயது மகனின் ஸ்டைல் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் இந்த புகைப்படத்திற்கு ஏராளமான லைக்ஸ் குவிந்து வருகிறது.

இந்த வாரம் வெள்ளிக்கிழமை 8 தமிழ் படங்கள் ரிலீஸ்.. ரசிகர்களுக்கு கொண்டாட்டம்..!

ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளியாகி வரும் நிலையில் இந்த வாரம் 8 தமிழ் திரைப்படங்கள் வெளியாக உள்ளது என்பதும் அனைத்துமே சின்ன மற்றும் மீடியம் பட்ஜெட் படங்கள்

ஒரு இன்ஸ்டா பதிவுக்கு இத்தனை கோடியா? அசர வைக்கும் விராட் கோலியின் சொத்து மதிப்பு!

இந்தியக் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரராக இருந்துவரும் விராட் கோலியின் சொத்து மதிப்பு

விடிய விடிய போதை… நள்ளிரவில் விபச்சாரம்… கூட்டமாகச் சிக்கிய வெளிநாட்டு பெண்கள்!

பெங்களூர் பகுதியில் இயங்கிவந்த மதுபான விடுதியில் 25 வெளிநாட்டு பெண்கள் போதைப்பொருள் பயன்படுத்தியதோடு விபச்சாரத்திலும் ஈடுபட்டதைத் தொடர்ந்து

கேப்டன் பதவி கிடைக்காததற்கு இதுதான் காரணமா? ரவிச்சந்திரன் அஸ்வின் கூறிய அதிர்ச்சி தகவல்!

இந்தியக் கிரிக்கெட் அணியில் சுழற்பந்து வீச்சாளராக இருந்து நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றிருக்கும் ரவிச்சந்திரன் அஸ்வின்