close
Choose your channels

சூர்யாவை விட வயது குறைவு, ஆனால் அம்மாவாக நடித்தேன்: தமிழ்  நடிகை பேட்டி!

Saturday, July 23, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

என்னை விட சூர்யாவுக்கு இரண்டு வயது அதிகம், ஆனாலும் அவருக்கு நான் அம்மாவாக நடித்தேன் என்று தமிழ் நடிகை ஒருவர் பேட்டி அளித்திருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவர் சூர்யா என்பதும் அவரது ’சூரரைப்போற்று’ தேசிய விருதுகளை அள்ளிக்குவித்தது என்பதும் தெரிந்ததே. இந்நிலையில் சூர்யா குறித்து நடிகை ராஜஸ்ரீ சமீபத்தில் அளித்த பேட்டியில் சில விஷயங்களை கூறியுள்ளார்.

பாலா இயக்கிய ’நந்தா’ படத்தில் சூர்யாவுக்கு அம்மாவாக நடித்தேன் என்றும் ஆனால் அப்போது என்னை விட சூர்யாவுக்கு இரண்டு வயது அதிகம் என்றும் கூறினார். படப்பிடிப்புக்கு முன் சூர்யாவை நான் ’அண்ணா’ என்று அழைப்பேன் என்றும் படப்பிடிப்பின் போது அவர் என்னை ’அம்மா’ என்று அழைப்பார் என்று கூறியுள்ளார்.

நடிகை ராஜஸ்ரீ பாரதிராஜாவின் ’கருத்தம்மா’ என்ற திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் என்பதும் அதன் பின்னர் பல திரைப்படங்களிலும் சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ராஜஸ்ரீ கூறுவது போல் நடிகைகளுக்கு மட்டும் தான் இந்த நிலை என்று கிடையாது, நடிகர்கள் கூட சில சமயம் குறைந்த வயதாக இருந்தாலும் ஹீரோவுக்கு அப்பாவாக நடித்த அனுபவமும் உண்டு. குறிப்பாக பாரதிராஜா இயக்கிய ’நாடோடி தென்றல்’ என்ற திரைப்படத்தில் கார்த்திக்கை விட 3 வயது குறைவான நெப்போலியன் அவருக்கு அப்பாவாக நடித்து இருப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.