வேலை வாங்கி தருவதாக கோடிக்கணக்கில் மோசடி.. கவர்ச்சி நடிகையின் சகோதரி கைது..!

  • IndiaGlitz, [Tuesday,March 07 2023]

வேலை வாங்கித் தருவதாக கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக கவர்ச்சி நடிகையின் சகோதரி காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தமிழ் உள்பட பல மொழி படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் நடிகை அல்போன்சா. இவரது சகோதரி ஷோபா வசந்த் என்பவர் சென்னை வளசரவாக்கத்தில் வேலை வாங்கித் தரும் நிறுவனம் ஒன்றை நடத்தி லட்ச கணக்கில் பலரிடம் பணம் பெற்றதாக தெரிகிறது.

சிங்கப்பூர், கனடா உள்பட வெளிநாடுகளில் மாதம் மூன்று லட்ச ரூபாய் சம்பளத்தில் வேலை கிடைக்கும் என்று விளம்பரம் செய்ததை அடுத்து பலர் அவரை நம்பி 15 லட்சம் முதல் 30 லட்சம் வரை பணம் கொடுத்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் திடீரென அவர் வளசரவாக்கம் அலுவலகத்தை காலி செய்துவிட்டு நொளம்பூருக்கு மாற்றி உள்ளார். இதனை அடுத்து பணம் கொடுத்தவர்கள் நெளம்பூர் சென்று அங்கும் சோபாவிடம் வேலை என்னாச்சு என்று கேட்டுள்ளனர். மார்ச் மாதம் கண்டிப்பாக வேலை கிடைத்து விடும் என்று கூறிவந்த சோபா வசந்த் திடீரென மீண்டும் தலைமறைவாகிவிட்டார்.

இதனை அடுத்து காவல்துறையில் பணம் கொடுத்து ஏமாந்தவர்கள் புகார் கொடுத்துள்ளதை அடுத்து சோபா மீது மோசடி தடுப்பு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த நிலையில் கோடம்பாக்கத்தில் உள்ள ஒரு விடுதியில் சோபா தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை அடுத்து அவர் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரிடம் லட்ச கணக்கில் பணம் கொடுத்தவர்கள் வரிசையாக புகார் அளித்து வரும் நிலையில் இவர் மோசடி செய்த தொகையின் மதிப்பு கோடி கணக்கில் இருக்கும் என்று கூறப்படுகிறது.

More News

இன்று முதல் 'லால் சலாம்' படப்பிடிப்பு.. யார் யார் கலந்து கொண்டார்கள் தெரியுமா?

ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகும் 'லால் சலாம்' என்ற திரைப்படத்தின் அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. 

'புஷ்பா 2' படத்தில் ராஷ்மிகாவை அடுத்து இணைந்த பிரபல நடிகை..!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் ராஷ்மிகா மந்தனா நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படத்தில் சமந்தாவின் ஐட்டம்

தனுஷ் பட இயக்குனரின் அடுத்த படத்தில் ப்ரியங்கா சோப்ரா.. டிரைலர் ரிலீஸ்..!

பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா நடித்த 'சிட்டாடெல்' என்ற வெப் தொடர் விரைவில் அமேசான் ப்ரைம் ஓடிடியில் இருக்கும் நிலையில் இதன் தமிழ் டிரைவர் சற்றுமுன் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. 

என்ன ஆச்சு அஜித் பட நடிகைக்கு? புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி..!

அஜித் படத்தில் நாயகியாக நடித்த நடிகைக்கு கணுக்காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளதை அடுத்து அவர் சிகிச்சை பெற்று வருவதாகவும் படிப்படியாக குணமாகி வருவதாகவும் புகைப்படத்துடன் கூடிய

தோனியை அடுத்து திரையுலகில் அடியெடுத்து வைக்கும் மற்றொரு சிஎஸ்கே வீரர்..!

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டமான தோனி சமீபத்தில் திரையுலகில் அடி எடுத்து வைத்தார் என்பதும் அவர் தயாரிப்பில் உருவாகும் முதல் படம் தமிழ்