close
Choose your channels

மசூதி முன்போ, சர்ச் முன்போ பெரியார் சிலை இருக்கா? தமிழ் நடிகையின் கேள்வியால் பரபரப்பு!

Saturday, August 6, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சினிமா ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் சமீபத்தில் ஸ்ரீரங்கம் கோவிலில் முன் இருக்கும் பெரியார் சிலையை உடைக்க வேண்டும் என்று பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது என்பதும் இது குறித்து காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் கனல்கண்ணன் சர்ச்சைக்குரிய பேச்சு குறித்து திரையுலக பிரபலங்கள் அரசியல்வாதிகள் பலர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வரும் நிலையில் அவ்வப்போது அரசியல் கருத்துக்களை தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து வரும் நடிகை கஸ்தூரி இது குறித்து கேள்வி எழுப்பி உள்ளார்.

உங்களுக்கு தெரிந்தால் சொல்லுங்கள். மசூதி முன்போ சர்ச் பக்கத்திலோ எங்கேனும் பெரியார் சிலையோ கடவுள் இல்லை என்ற வாசகமோ பார்த்ததுண்டா? அரசியல் தலைவர்களின் மாடமாளிகைகள், நிறுவனங்கள், பள்ளிகளில் உள்ளேயோ வெளியேயோ periyar சிலை உண்டா? கடவுள் சிலை பார்த்திருக்கிறேன்’ என கேள்வி எழுப்பியுள்ளார்.

கஸ்தூரியின் இந்த கேள்விக்கு வழக்கம்போல் நெட்டிசன்கள் தங்கள் பாணியில் கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் ஒரு சிலர் கஸ்தூரியின் பதிவுக்கு ஆதரவளித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் சர்ச் முன்பும், மசூதி முன்பும் இருக்கும் பெரியார் சிலைகளின் புகைப்படங்களையும் சிலர் பதிவு செய்து வருகின்றனர் என்பதும் இதற்கும் சளைக்காமல் கஸ்தூரி பதில் அளித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos