close
Choose your channels

கணவர், குழந்தைகளுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த பிரபல நடிகை: வைரல் வீடியோ

Monday, June 27, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தமிழ் சினிமாவின் பிரபல நடிகையாக இருந்த நடிகை ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

தமிழ் திரையின் கமல்ஹாசன், விஜய், சூர்யா உள்பட பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தவர் நடிகை சினேகா. இவர் நடிகர் பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் இந்த தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் சமூக வலைதளங்களில் ஆக்டிவ்வாக இருக்கும் சினேகா, அவ்வப்போது தனது குடும்பத்தினர் புகைப்படங்கள் வீடியோக்களை வெளியிட்டு வருவார். அந்த வகையில் சமீபத்தில் அவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் திருப்பதி சென்று சுவாமி தரிசனம் செய்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் சினேகா திருப்பதி வந்திருப்பது குறித்த செய்தி அறிந்த பக்தர்கள் அவருடன் செல்பி எடுத்துக்கொண்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.