close
Choose your channels

பிரபலங்கள் பரிந்துரை செய்த புத்தகங்களின் வரிசை!

Friday, December 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சென்னை புத்தகக் கண்காட்சியையொட்டி வாசகர்கள் பலரும் புத்தகங்களைக் குறித்து ஆர்வம் காட்டிவருகின்றனர். அந்த வகையில் எழுத்துலகில் அதிகம் பேசப்பட்ட படைப்புகள், சாகித்ய அகாடமி விருதுபெற்ற படைப்புகள், வாழ்க்கையை மாற்ற உதவும் தன்னம்பிக்கை புத்தகங்கள், வரலாறு சார்ந்த புத்தகங்கள், சமகால நோக்கில் வரலாற்றை திரும்பிப்பார்க்க வைக்கும் புத்தகங்கள் என்று ஏராளமான படைப்புகள் குவிந்து கிடக்கின்றன.

அதிலிருந்து சிறந்த புத்தகங்களை தேர்வு செய்வதற்கு எழுத்தளார், பிரபலங்கள் போன்றோர் நமக்கு வழிகாட்டியுள்ளனர். அவற்றிலிருந்து சில.

1.இயக்குநர் ராம் கூறிய என்னைச் செதுக்கிய 3 நூல்கள்-

பாப்லோ நெருதா கவிதைகள்- நெருதா

பெய்ரூத்திலிருந்து ஜெருசலேம் வரை – ஆங்க் ஸ்வீ சாய்

பேர்ட் காட்டேஜ் – எவா மெய்யர்

2.முதல்வரின் முதன்மை தனிச்செயலாராக பணியாற்றிவரும் ஐஏஎஸ் அதிகாரி உதயச்சந்திரன் பரிந்துரை செய்த நூல்கள்-

Early Indian _ Tony Joseph (மனிதகுல வரலாறு தோன்றிய விதம், குறிப்பாக இந்தியாவில் மனிதன் தோன்றிய வரலாற்றை அறிவியல் சான்றுகளுடன் விளக்கியிருக்கும் ஆய்வு புத்தகம்)

Sapiens – Yuval noah haran ( தொல்லியல் சார்ந்தும், மானுடவியல் சார்ந்தும் மனித குலவரலாற்றை விளக்கியிருக்கும் நூல்)

Journey of A civilization – Balakrishnan (நாகரிகத்தோற்ற வரலாறு, சிந்துசமவெளி வரலாறுகளை விரிவாக ஆய்வுசெய்து எழுதப்பட்ட நூல்)

முத்துநாகு எழுதிய சுளுந்தீ நாவல்

வைக்கம் போராட்ட வரலாறு (பெரியாரின் வைக்கம் போராட்ட வரலாற்றை கூறுவது)

3.புகழ்பெற்ற எழுத்தாளரும் சாகித்ய அகாடமி விருதுபெற்றவருமான சோ.தருமன் பரிந்துரைத்த புத்தகங்கள்-

கி.ராஜநாராணனின்- சிறுகதைகள், கோபல்ல கிராமம் நாவல், பதிவுகள் நவால், கடிதங்கள் நாவல்

ஜெயமோகனின் காடு, அறம் போன்ற நாவல்கள்

எஸ். ராமகிருஷ்ணனின் சஞ்சாரம் நாவல்,

சுஜாதாவின் நூல்கள், மா.அரங்கநாதனின்- முத்துக்கள் பத்து கதை, சிறுகதைகள் போன்ற நூல்கள் தன்னை பாதித்தவையாகக் குறிப்பிட்டுள்ளார்.

4.எழுத்தாளர் இமயம் பரிந்துரைத்த புத்தகங்கள்

கவிஞர் சுகுமாறன் எழுதிய “பெருவலி“ நாவல். ஜாஷஹானின் முதல் மகள் சாஹனாராபேகம் பற்றிய கதை இது. முஸ்லீகளில் பெண்கள் படும் அவஸ்தையைப் பற்றியது.

கவிஞர் மனுஷ்யபுத்திரன் எழுதிய “வாதையின் கதை“ எனும் கவிதை நூல்.

அரங்கன் “ஒரு சொல் கேளீர்“ தமிழைப் பிழையின்றி எழுதுவதற்கான ஒரு கையேடு

சமஸ் – “யாருடைய எலிகள் நாம்?“ சமகால அரசியலைப் புரிந்துகொள்ளும் அடிப்படையில் எழுதப்பட்ட கட்டுரை தொகுப்பு.

“அமைதி என்பது நாமே“ எனும் மொழிபெயர்ப்பு நூல். பேராசையில் இருந்து எளிய வாழ்க்கை நோக்கி பயணிக்க உதவும் தன்னம்பிக்கை புத்தகம்

செல்வன் அருளானந்தம் எழுதிய “சொற்களின் சுழலும் உலகம்“ எனும் தன்வரலாற்று கதை. அகதி வாழ்க்கையில் நடக்கும் நெருக்கடி, மனநிலை பற்றியது.

5. மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பினரான சு.வெங்கடேசன் பரிந்துரைத்த நூல்கள்-

ஆழி செந்தில்நாதன் “மொழி எங்கள் உயிருக்கு நேர்“ எனும் வரலாற்று நூல். இது மொழிப்போராட்டத்தை அடிப்படையாக வைத்து எழுதப்பட்டது.

ஆய்வாளர் டி. தருமராஜன் எழுதிய “அயோத்திதாசர் பார்ப்பனர் முதல் பறையர் வரை“ அயோத்திதாசரின் எழுத்துகளை சமகாலத்திற்குப் பொருத்திப் பார்த்து எழுதிய நூல்.

முத்துநாகு எழுதிய சுளுந்தீ நாவல்

சோ.தர்மன் எழுதிய சூல் எனும் நாவல் போன்றவற்றை பரிந்துரைத்து இருக்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.