close
Choose your channels

படப்பிடிப்பின் இடையே 'அரபிக்குத்து' பாடலுக்கு டான்ஸ் ஆடிய ஹீரோ-ஹீரோயின்!

Monday, February 21, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

படப்பிடிப்பின் இடையில் தமிழ் சினிமாவின் ஹீரோ மற்றும் ஹீரோயின் ஆகிய இருவரும் ’அரபிக்குத்து’ பாடலுக்கு டான்ஸ் ஆடிய வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி விஜய் நடித்த ’பீஸ்ட்’ படத்தில் இடம்பெற்ற ’அரபிக்குத்து’ பாடல் சமீபத்தில் வெளியான நிலையில் இந்த பாடலுக்கு பல திரையுலக பிரபலங்கள் நடனமாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம்

அந்த வகையில் தமிழ் சினிமாவின் ஹீரோக்களில் ஒருவரான ஜெய் மற்றும் ஹீரோயின்களில் ஒருவரான அம்ரிதா ஐயர் ஆகிய இருவரும் படப்பிடிப்பின் இடையே ’அரபிக்குத்து’ பாடலுக்கு சூப்பராக நடனமாடுகின்றனர்.

இது குறித்த வீடியோவை அம்ரிதா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ஒரு மணி நேரத்தில் கிட்டத்தட்ட ஒரு லட்சம் லைக்ஸ் கிடைத்துள்ளது. ஜெய் மற்றும் அம்ரிதா ஐயர் ஆகிய இருவரும் சுந்தர் சி இயக்கி வரும் திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பது தெரிந்ததே.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.