பிரபல தமிழ் நகைச்சுவை நடிகர் காலமானார்: அதிர்ச்சியில் திரையுலகம்!

  • IndiaGlitz, [Tuesday,May 11 2021]

தமிழ் திரையுலகின் பிரபல நகைச்சுவை நடிகர் ஒருவர் காலமானதை அடுத்து திரையுலகம் அதிர்ச்சி அடைந்துள்ளது. 

கடந்த சில நாட்களாகவே திரையுலகினரை சேர்ந்தவர்கள் தொடர்ச்சியாக உயிரிழந்து வருவது திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக கொரோனா வைரஸ் தொற்று காரணமாகவும், மாரடைப்பு காரணமாகவும் முக்கிய திரையுலக பிரபலங்கள் உயிரிழந்து வருகின்றனர். 

இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தமிழ் நகைச்சுவை நடிகர்களில் ஒருவரான நெல்லை சிவா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். இதனையடுத்து அவருக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். 

பாண்டியராஜன் நடித்து இயக்கிய ‘ஆண்பாவம்’ என்ற திரைப்படத்தின் மூலம் நகைச்சுவை நடிகராக அறிமுகமான நெல்லை சிவா அதன்பிறகு நூற்றுக்கணக்கான திரைப்படங்களில் நகைச்சுவை கேரக்டரில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இவர் தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ’பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலிலும் இவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

சபாநாயகர் பதவிக்கு என்னென்ன அதிகாரங்கள் உள்ளது..?

கடந்த 1980-ஆம் ஆண்டு முதல்  உயர்ந்த அதிகாரம் கொண்ட பதவியாகவே சபாநாயகர் பதவி இருந்து வருகிறது. சபாநாயகராக பதவியேற்பவருக்கு என்னென்ன அதிகாரங்கள்  உள்ளது என்பதை பார்க்கலாம் வாருங்கள்.

தென்கிழக்கு அரபிக்கடலில் புயல்… தமிழகத்திற்கும் பாதிப்பா?

வரும் மே 16 ஆம் தேதி தென்கிழக்கு அரபிக்கடல் பகுதியில் புயல் உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் வெளியிட்டு உள்ளது

கொரோனா பாதித்ததால் வீட்டை பூட்டிய முதலாளி… இளம்பெண் குழந்தையோடு டாக்ஸியில் தங்கிய அவலம்!

இமாச்சலப் பிரதேசத்தில் ஒரு இளம்பெண்ணுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது.

தவறு செய்தவர்கள் திருந்துவார்கள் என்று காத்திருக்க மாட்டேன்: கமல்ஹாசன் அறிக்கை

தவறிழைத்தவர்கள் தாமே திருந்துவார்கள் என்று காத்திருக்க மாட்டேன் என்றும் தவறிழைத்தவர்களை திருத்தம் கடமையும் உரிமையும் உள்ள தலைவன் நான் என்றும் கமலஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்

தயாரிப்பாளர் தேனாண்டாள் முரளிக்கு மாரடைப்பு: மருத்துவமனையில் அனுமதி

சில மாதங்களாகவே தமிழ் திரை உலகிற்கு போதாத காலம் ஏற்பட்டுள்ளது என்பது நடைபெற்றுவரும் அசம்பாவித சம்பவங்களில் இருந்து தெரிய வருகிறது. மாரடைப்பு காரணமாகவும், கொரோனா வைரஸ் தொற்று