ஒரே ஒரு படம் தான்.. ரூ.100 கோடி வசூல்.. பிஎம்டபிள்யூ கார் வாங்கிய இயக்குனர்.. குவியும் வாழ்த்துக்கள்.!

  • IndiaGlitz, [Friday,April 19 2024]

தமிழ் திரை உலகில் ஒரே ஒரு படத்தை அறிமுக இயக்குனர் ஒருவர் இயக்கிய நிலையில் அந்த படம் 100 கோடி ரூபாய் வசூல் செய்து சாதனை செய்த நிலையில் தற்போது அவர் பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் நடித்த ’டான்’ என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் சிபி சக்கரவர்த்தி. இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் உலகம் முழுவதும் 100 கோடிக்கும் அதிகமாக இந்த படம் வசூல் செய்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இதனை அடுத்து அவர் ரஜினி படத்தை இயக்கப் போவதாகவும், தனுஷ் படத்தை இயக்கப் போவதாகவும் கூறப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை இயக்கப் போவதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகளை விரைவில் தொடங்க இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் இயக்குனர் சிபி சக்கரவர்த்தி கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனது பெற்றோருக்கு புதிய கார் ஒன்றை வாங்கி கொடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்த நிலையில் தற்போது அவர் தனக்காக ஒரு விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ கார் வாங்கிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.

இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். ஒரே ஒரு திரைப்படத்தை மட்டுமே இயக்கி பிஎம்டபிள்யூ கார் வாங்கியுள்ள இயக்குனர் சிபி சக்கரவர்த்திக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

More News

தமன்னாவை மிரட்டிய மர்ம நபர்.. போன் உரையாடலில் என்ன நடந்தது? அதிர்ச்சி வீடியோ..!

நடிகை தமன்னா தன்னை ஒருவர் போனில் மிரட்டியதாகவும் ஆனால் தான் சுதாரித்து கொண்டதால் ஒரு பெரிய ஆபத்திலிருந்து தப்பித்துக் கொண்டதாகவும் வெளியிட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

ரஜினி, அஜித், சிவகார்த்திகேயன் வாக்களிப்பு.. விஜய் துபாயில் சிக்கி கொண்டாரா?

தமிழகத்தில் இன்று பாராளுமன்ற தேர்தல் நடைபெறும் நிலையில் பல திரை உலக பிரபலங்கள் சென்னையில் உள்ள வாக்கு சாவடிகளில் வாக்களித்து வரும் புகைப்படங்கள் இணையத்தில் வைரல் ஆகி வருகின்றன..

நீரிழிவு நோய்க்கும் ஒரு பெண்ணின் கருவுறுதலுக்கும் உள்ள தொடர்பு ?

கர்ப்ப காலத்தில் ஏற்படும் நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணமாக உடல் எடை கண்டறியப்பட்டுள்ளது.......

'குக் வித் கோமாளி' சீசன் 5: கிராண்ட் ஓப்பனிங் தேதி அறிவிப்பு.. அட்டகாசமான ப்ரோமா வீடியோ..!

விஜய் டிவியில் நடந்த நான்கு வருடங்களாக ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் ஒளிபரப்பாகும் தேதி

எதுல முடியுமோ அதுல குறிச்சு வச்சுக்கோங்க: 'ஸ்டார்' ரிலீஸ் தேதியை அறிவித்த கவின்..!

கவின் நடித்த 'ஸ்டார்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து இறுதி கட்ட தொழில்நுட்ப பணிகளும் முடிவடைந்து விட்டது என்றும் விரைவில் இந்த படம் ரிலீஸ் ஆக இருப்பதாகவும் கூறப்பட்டது.