close
Choose your channels

'ஜப்பான்' நான் இயக்க இருந்த படம்: பிரபல இயக்குனரின் பதிவு!

Saturday, November 12, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கார்த்தி நடிப்பில் ராஜுமுருகன் இயக்கத்தில் உருவாகயிருக்கும் திரைப்படத்திற்கு ’ஜப்பான்’ என்ற டைட்டில் வைக்கப்பட்டுள்ளது என்பதும் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் பூஜை சமீபத்தில் நடந்தது என்பதும் தெரிந்ததே

ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் இசையில் உருவாகயிருக்கும் இந்த படத்தில் கார்த்தி, அனு இமானுவேல் உள்பட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது

இந்த நிலையில் ’ஜப்பான்’ என்ற டைட்டிலில் நான் ஒரு படத்தை இயக்க இருந்தேன் என்றும் ஆனால் எதிர்பாராதவிதமாக அந்த படம் கால தாமதமாகி விட்டது என்றும் இருப்பினும் ’ஜப்பான்’ என்ற டைட்டில் வைத்துள்ள படக்குழுவினருக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் பிரபல இயக்குனர் வசந்தபாலன் கூறியுள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் கூறியிருப்பதாவது:

நடிகர் விஷ்ணு விஷாலுடன் 3 ஆண்டுகளுக்கு முன்பு நடக்க வேண்டிய படம். பல்வேறு காரணங்களால் தாமதங்கள் ஏற்பட்டு நடக்க வில்லை. இப்போதும் அவ்வப்பொழுது அந்த படத்தை பண்ணலாம் சார் என்று விஷ்ணு அடிக்கடி தொலைபேசியில் உரையாடுவார். அந்த கதைக்கு வைத்த தலைப்பு. தலைப்புகளில் நமக்கு இருக்கும் அதீத காதல் இருக்கே... அது மிக பெரியது. இதை விட நல்ல தலைப்பை காலம் நம் கைகளில் தரலாம். ஜப்பான் வெல்லட்டும். இயக்குநர் ராஜ் முருகனுக்கும் கார்த்தி அவர்களுக்கும் வாழ்த்துகள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.