விஷால் சஸ்பெண்ட் ரத்து. தயாரிப்பாளர் சங்கம் அறிவிப்பு

  • IndiaGlitz, [Friday,February 03 2017]

தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து விஷால் சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து விஷால் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணையின்போது விஷால் வருத்தம் தெரிவித்தும் சஸ்பெண்ட் தொடரும் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்தது. எனவே இந்த வழக்கை தள்ளுபடி செய்வதாக தனி நீதிபதி உத்தரவிட்டார்.
இதனையடுத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டதை எதிர்த்து நடிகர் விஷால் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளார். மேல்முறையீட்டு மனுவை விசாரணை செய்த சென்னை ஐகோர்ட் விஷாலின் சஸ்பெண்டை இன்றுக்குள் தயாரிப்பாளர் சங்கம் ரத்து செய்ய வேண்டும் என்றும் இல்லையேல் நீதிமன்றமே உத்தரவு பிறப்பிக்கும் என்றும் அறிவித்தது.
இதனையடுத்து சற்று முன்னர் விஷாலின் சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டதாக தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது. விஷால் மன்னிப்பு கோரியதால் அவரது சஸ்பெண்ட் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

More News

ஜெயம் ரவியின் 'போகன்' முதல்நாள் சென்னை வசூல் நிலவரம்

'தனி ஒருவன்' வெற்றிக்கு பின்னர் மீண்டும் ஜெயம் ரவி-அரவிந்தசாமி கூட்டணி இணைந்து நடித்த படமான 'போகன்' நேற்று உலகம் முழுவதும் வெளியானது.

பிறந்த நாள் வாழ்த்துக்கள் சிம்பு..

சகலகலா வித்தகர் டி.ராஜேந்தரின் மகனும் இளைஞர்களின் நம்பிக்கை நட்சத்திரமுமான சிம்பு இன்று தனது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார்

மீண்டும் ஒருமுறை கடற்கரையில் கூடிய இளைஞர்கள் கூட்டம்

சென்னை மெரீனா கடற்கரையில் கூடிய இளைஞர்களின் கூட்டம் தமிழினத்தின் அடையாளங்களில் ஒன்றான ஜல்லிக்கட்டை பீட்டா என்ற கொடிய அமைப்பிடம் இருந்து மீட்டு தந்தது. இந்நிலையில் இந்த போராட்டத்தின் வெற்றி காரணமாக இனி எந்த பிரச்சனைக்கும் மாணவர்கள் முன்வருவார்கள் என்ற நம்பிக்கை அனைவரிடத்திலும் தோன்றியது...

படித்து கொண்டே விபச்சாரம் செய்த கல்லூரி மாணவி படுகொலை

உகாண்டா நாட்டை சேர்ந்த இளம்பெண் பெங்களூரில் படித்து கொண்டே விபச்சாரம் செய்த நிலையில் பேரம் படியாததால் வாடிக்கையாளர் ஒருவரால் கொலை செய்யப்பட்டார்...

விஷால் சஸ்பெண்ட் விவகாரம்: தயாரிப்பாளர் சங்கத்திற்கு நாளை வரை கெடு

தென்னிந்திய நடிகர் சங்கத்தேர்தலில் வெற்றி பெற்ற விஷால், சங்கத்தின் நிர்வாகத்தை சிறப்பான முறையில் செய்து கொண்டிருக்கும் நிலையில் தயாரிப்பாளர் சங்கத்திலும் பல சீர்திருத்தங்கள் செய்ய விரும்பினார். ஆனால் அவர் கொடுத்த பேட்டி ஒன்றை அடிப்படையாக வைத்து தயாரிப்பாளர் சங்கத்தில் இருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்...