CSK விற்கு எதிராக சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்… காரணம் இதுதான்…

ஐபிஎல் அணிகளில் முக்கியமான அணியாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்துமுடிந்த ஐபிஎல் ஏலம் மூலமாக இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. 87.5 கோடிக்கு 25 வீரர்களைத் தேர்வு செய்துள்ள இந்த அணிக்கு எதிராக ஹேஷ்டேக்குகள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சின்னதல சுரேஷ் ரெய்னாவையும் நீண்டகாலமாக அணியில் விளையாடிவரும் டுபிளஸிஸைம் ஏலத்தில் எடுக்கவில்லை. அவர்களுடைய ரசிகர்கள்தான் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஹேஷ்டேக்கை வெளியிட்டு வருகின்றனர் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இலங்கை வீரர் ஒருவரை ஏலத்தில் எடுத்ததால் தமிழ் அமைப்புகளை அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என்று போராட்டங்களை துவங்கியிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

சிஎஸ்கே இலங்கையைச் சேர்ந்த இளம் சுழற்பந்துவீச்சாளர் மகதிஷ் தீக்ஷனாவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது. இதையடுத்து தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு வீரரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்திருக்கக்கூடாது எனவும் உடனே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சில இடங்களில் பதாகை ஏந்தி போராட்டங்களை நடத்தியுள்ளனர்.

மேலும் மகதிஷ் தீக்ஷனாவை அணியில் இருந்து நீக்குமாறு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இலங்கையை சேர்ந்த ஒருசில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவந்தனர். மேலும் இலங்கை வீரர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாது. அதனால் அணியில் எடுக்க வேண்டாம் என்றுகூட கடந்த சில வருடங்களில் ஐபிஎல் அணிகளுக்கு அழுத்தங்கள் இருந்துவந்தன. இந்நிலையில் மகதிஷ் தீக்ஷனா விவகாரம் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.

More News

திடீரென நாட்டின் பெயரையே மாற்றிய அதிபர்… காரணம் என்ன தெரியுமா?

ஐ.நா பொதுசபையால் “துருக்கி“ என அங்கீகரிக்கப்பட்ட பெயரை “துருக்கியே“

ஷுட்டிங்கில் 1,000 பாம்புகளை திறந்துவிட்டார்கள்…. நடுங்கிய நடிகை ராதிகாவின் அனுபவம்!

நடிகை ராதிகா பிரபல நடிகர் சிரஞ்சீவியுடன் தெலுங்கு சினிமா ஒன்றில்

சென்னை அண்ணா சாலையில் 'அஜித் 61' படப்பிடிப்பு?

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படம் வரும் 24ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் அவர் நடிக்க உள்ள 61 வது படத்தின் படப்பிடிப்பு குறித்த தகவல் தற்போது கசிந்துள்ளது. 

பிறந்தநாளில் கிளாமர் போட்டோஷூட்:  'சண்டக்கோழி' மீரா ஜாஸ்மினா இவர்? 

விஷால் நடித்த 'சண்டக்கோழி' விஜய் நடித்த 'புதிய கீதை' அஜித் நடித்த 'ஆஞ்சநேயா'  போன்ற படங்களில் நடித்து கடந்த 2000ம் ஆண்டுகளில் பிசியான நடிகையாக இருந்தவர் நடிகை மீராஜாஸ்மின்.  

சசிகுமாரின் அடுத்த படத்தின் இயக்குனர், இசையமைப்பாளர் அறிவிப்பு!

நடிகரும் இயக்குனருமான சசிகுமார் 'கொம்பு வச்ச சிங்கம்' 'பகைவனுக்கு அருள்வாய்' உள்பட 4 திரைப்படங்களில் நடித்து வருகிறார். அவரது நடிப்பில் உருவாகி வரும் 'காமன்மேன்' என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு