தமிழ்கன் அட்மின் பிடிபட்டது எப்படி?

  • IndiaGlitz, [Wednesday,September 13 2017]

கடந்த ஏப்ரல் மாதம் தயாரிப்பாளர் சங்க தலைவராக பதவியேற்றபோதே ஆன்லைன் பைரஸி குற்றவாளிகளை பிடிப்பதே தனது முதல் வேலை என்றும், ஆறு மாதத்திற்குள் அவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவேன் என்றும் விஷால் சூளுரைத்தார் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த நிலையில் சொன்னைதை செய்யும் வகையில் நேற்று கெளரிசங்கர் என்ற தமிழ்கன் அட்மின் பிடிபட்டார். முதலில் தமிழ் ராக்கர்ஸ் அட்மின் என்று கூறப்பட்டாலும் தற்போது அவர் தமிழ் கன் இணையதளத்தை சேர்ந்தவர் என்பது உறுதியாகியுள்ளது

விஷாலின் முதல்படி: 

ஆன்லைன் பைரஸியால் ஒரு தயாரிப்பாளர் எந்த அளவுக்கு நஷ்டம் அடைவார் என்பதை விஷாலும் ஒரு தயாரிப்பாளர் என்ற வகையில் அனைத்தும் அறிந்து இருந்ததால், முதல்கட்டமாக ஆன்லைன் பைரஸி நபர்களை பிடிக்க ஒரு ஐடி டீமை உருவாக்கினார். இவர்களுடைய பணி ஆன்லைனில் புதிய திரைப்படங்களை அப்லோடு மற்றும் டவுன்லோடு செய்யும் ஐபி முகவரியை கண்டுபிடிப்பது தான்.

திறமையாக செயல்பட்ட விஷால் டீம்:

இந்த ஐடி டீம் கடந்த சில மாதங்களாக ஆன்லைனில் எந்தெந்த திரைப்படம் எந்தெந்த ஐபி முகவரியில் இருந்து அப்லோடு செய்யப்படுகிறது. அந்த ஐபி முகவரியின் எங்கே உள்ளது ஆகியவற்றை கண்டுபிடித்து பின்னர் காவல்துறையினர்களின் உதவியை நாடினர்

காவல்துறையின் ஒத்துழைப்பு:

என்னதான் தனியாக துப்பறிந்தாலும் காவல்துறையினர்களின் உதவி தேவை என்பதை முதலில் இருந்தே அறிந்த விஷால், தாங்கள் கண்டுபிடித்த தகவல்கள் அனைத்தையும் ரகசியமாக காவல்துறையினர்களிடம் ஒப்படைத்து சைபர் கிரைமின் உதவியையும் நாடினார்

சைபர் க்ரைம் எடுத்த அதிரடி நடவடிக்கை:

தொழில்நுட்ப வகையில் சகல வசதிகளையும் பெற்றுள்ள சைபர் கிரைம் போலீசார் விஷால் டீம் கொடுத்த தகவலின் அடிப்படையில் உடனடியாக களமிறங்கி சம்பந்தப்பட்ட நபர்களை கண்காணித்தனர்.

அப்படி கண்காணித்ததில் அதிகளவிலான திரைப்படங்கள் அப்லோடு மற்றும் டவுண்லோடு செய்யப்பட்ட ஐபி முகவரி ஒன்றினை கண்காணித்ததில் தான் தற்போது தமிழ்கன் அட்மின் கைது செய்யப்பட்டுள்ளார்.

அப்பாவிகள் சிக்குவார்களா?

தமிழ்கன் அட்மின் கைது செய்யப்பட்டதும் கைதானவர் தங்கள் அட்மின் இல்லை என்றும் அவர் அப்பாவி என்றும் தமிழ்கன் டுவிட்டரில் பதிவு செய்யப்பட்டிருந்தது. ஆனால் வாரத்திற்கு ஒருமுறையோ அல்லது மாததிற்கு ஒருமுறை திரைப்படங்களை டவுன்லோடு செய்யும் பொதுமக்களில் ஒருவரில் இவர் இல்லை என்பதை சைபர் கிரைம்உறுதி செய்தவுடன் தான் கைது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக போலிசார் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

பொதுமக்களுக்கு சிக்கலா?

விஷாலின் டீம் இன்னும் பெரிதாக்கினால் தமிழகம் முழுவதும் யார் யார் எந்த படத்தை டவுன்லோடு செய்கிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியும். இருப்பினும் தற்போது வணிகரீதியாக செயல்படும் ஆன்லைன் பைரஸி முதலைகளுக்கு மட்டுமே இப்போதைக்கு குறி வைக்கப்பட்டுள்ளதாகவும் பொதுமக்கள் பக்கம் நடவடிக்கை திரும்பாது என்றும் கூறப்படுகிறது.

தமிழ் சினிமாவை காப்பாற்றுவாரா?

விஷால் தயாரிப்பாளர் சங்க தலைவராக பொறுப்பேற்றவுடன் கொடுத்த வாக்கை காப்பாற்றும் வகையில் முதல் பிள்ளையார் சுழியை போட்டுள்ளார். இதேபோல் இன்னும் பல ஆன்லைன் பைரஸி முதலைகளை அவர் விரைவில் கண்டுபிடித்து தமிழ் சினிமாவை காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை இந்த நடவடிக்கையின் மூலம் தெரியவந்துள்ளது. 

More News

தமிழ்கன் அட்மின் அதிரடி கைது

தயாரிப்பாளர் சங்க தலைவர் தேர்தலில் வெற்றி பெற்றபோது தமிழ் ராக்கர்ஸ்களே தயாராக இருங்கள், உங்களை கண்டுபிடித்து காட்டுகிறேன் என்று விஷால் சவால் விட்டார்.

சீன மொழியில் ரீமேக் செய்யப்படும் சூப்பர் ஹிட் தென்னிந்திய படம்

இதுவரை அமீர்கானின் '3 இடியட்ஸ்', 'டங்கல்' மற்றும் 'பாகுபலி' போன்ற திரைப்படங்கள் சீன மொழியில் டப் செய்யப்பட்டு அந்நாட்டில் பிரமாண்டமாக ரிலீஸாகி நல்ல வசூலை பெற்றது என்றுதான் கேள்விப்பட்டிருக்கின்றோம்

சேலம் தம்பதிக்கு காஜல் அகர்வால் பெயரில் ஸ்மார்ட் கார்ட்

ரேசன் கார்டுகளுக்கு பதில் ஸ்மார்ட்கார்ட் வழங்கும் திட்டத்தை சமீபத்தில் தமிழக அரசு தொடங்கியது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இந்த ஸ்மார்ட்கார்டுகளில் பல்வேறு குழப்பங்கள் இருந்ததாகவும்

அஜித்தின் அடுத்த படமும் ஹாலிவுட் ஸ்டைலா?

அஜித்-சிவா கூட்டணி 4வது முறையாக இணையவுள்ளது குறித்து செய்திகள் வந்து கொண்டிருக்கும் நிலையில் தற்போது இந்த படத்தின் கதை குறித்தும் ஒரு வதந்தி சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது

ஃபெப்சி-தயாரிப்பாளர் சங்கம் பிரச்சனையில் திடீர் திருப்பம்

கடந்த சில மாதங்களாக தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும் ஃபெப்சி அமைப்பிற்கும் இடையே பிரச்சனைகள் நடந்து வந்தது அனைவரும் அறிந்ததே.