'காந்தாரா' ரிஷப் ஷெட்டியை கட்டிப்பிடித்து பாராட்டிய தமிழ் ஹீரோ: வைரல் வீடியோ!

  • IndiaGlitz, [Saturday,October 15 2022]

கன்னட திரையுலகில் சூப்பர் ஹிட்டான ’காந்தாரா’ என்ற திரைப்படம் இன்று தமிழில் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.

ஏற்கனவே இந்த படத்தை பார்த்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் பாராட்டிய நிலையில் தற்போது மற்றொரு தமிழ் ஹீரோ ’காந்தாரா’ படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

’காந்தாரா’ படத்தின் கதை என்பது பழங்காலத்தில் நிம்மதி இல்லாமல் இருந்த அரசன் ஒருவன் பழங்குடியினர் வழிபடும் தெய்வத்தின் சிலையை வணங்கிய உடன் நிம்மதி அடைகிறார். அதற்காக அவர் தனது நிலத்தின் பெரும் பகுதியை பழங்குடியினருக்கு எழுதிக் கொடுக்கிறார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து மன்னரின் வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அந்த நிலத்தை பிடுங்க நினைக்கும்போது அந்த தெய்வத்தின் சக்தியால் ரத்தம் கக்கி இறக்கிறார்.

இந்த நிலையில் சில ஆண்டுகள் கழித்து அரசு அதே பழங்குடியினரின் நிலத்தை பிடுங்க நினைக்கும் போது அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ரிஷப் ஷெட்டி எப்படி போராடி அரசின் முயற்சியை தடுக்கின்றார் என்பதுதான் இந்த படத்தின் கதை.

ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கர்நாடகத்தில் மட்டும் ரூபாய் 50 கோடி வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது தமிழிலும் இந்தப்படம் மிகப்பெரிய வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படத்தை இன்று பார்த்த பிரபல நடிகர் கார்த்தி படம் பார்த்து முடித்ததும் ரிஷப் ஷெட்டியை கட்டியணைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

இதுதான் குந்தவையின் உண்மையான புகைப்படமா? பிரபலத்தின் நீண்ட விளக்கம்!

'பொன்னியின் செல்வன்' திரைப்படம் வெளியானதில் இருந்து அந்த படத்தின் கேரக்டர்கள் குறித்த ஆய்வுகளை நெட்டிசன்கள் தொடங்கிவிட்டனர். மேலும் இந்தியாவுக்கு சுற்றுலா வருபவர்கள் பலர்

குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்து கொண்டே மேக்கப் போடும் தனுஷ் பட நாயகி: வைரல் வீடியோ!

தனுஷ் நடித்த படத்தில் நாயகியாக நடித்த நடிகை ஒருவர் குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துக் கொண்டே படப்பிடிப்பிற்கு மேக்கப்

திரை நட்சத்திரங்கள் விளையாடும் 10 ஓவர் கிரிக்கெட் போட்டி: தொடங்கி வைக்கும் பிரபல கிரிக்கெட் வீரர்!

பிரபல இந்திய திரை நட்சத்திரங்கள்,  சர்வதேச கிரிக்கெட் ஜாம்பவான்கள் மற்றும் கார்ப்பரேட் பணியாளர்கள் இணைந்து விளையாடும்,  சூப்பர் 10 லீக்கின் முதல் பதிப்பு,  இந்திய முன்னணி  நடிகர் கிச்சா சுதீப் மற்றும்

தீபாவளிக்கு ரிலீஸ் ஆகும் சல்மான்கானின் அடுத்த படம்! நாயகி காத்ரினா கைஃப்!

இந்தாண்டு தீபாவளிக்கு சிவகார்த்திகேயன் நடித்த 'பிரின்ஸ்' மற்றும் கார்த்தி நடித்த 'சர்தார்' ஆகிய இரண்டு திரைப்படங்கள் ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக இருக்கும் நிலையில் சல்மான்கான் நடித்த 'டைகர் 3'

'பத்தவச்சு பறக்க விட்டுட்டீங்க!.. சூர்யா வாழ்த்து தெரிவித்தது யாருக்கு தெரியுமா?

'பத்தவச்சு பறக்க விட்டுட்டீங்க' என பிரபல நடிகர் நடித்த படத்தின் டிரைலருக்கு நடிகர் சூர்யா தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.