close
Choose your channels

பிக்பாஸ் 4 நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட ஹீரோ? 

Thursday, September 10, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கமலஹாசன் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் 4வது சீசன் விரைவில் தொடங்கப்பட இருக்கும் நிலையில் இந்த சீசனின் போட்டியாளர்கள் யார் யார் என்பது குறித்த தகவல்கள் அவ்வப்போது வெளிவந்து கொண்டிருக்கின்றன. ஏற்கனவே பிக்பாஸ் நிகழ்ச்சியில் ரம்யா பாண்டியன், சூர்யாதேவி, எலிசபெத் ஹெலன், புகழ், கிரண் ரத்தோட், உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொள்ள இருப்பதாக செய்திகள் வெளிவந்து கொண்டிருந்தது

இந்த நிலையில் தமிழ் திரைப்பட ஹீரோ ஒருவரும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவிருப்பதாக வெளிவந்துள்ள தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரை தொலைக்காட்சி தொடர்களில் நடித்து அதன்பின் சிவகார்த்திகேயன் தயாரித்த ’நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு ஓடு ராஜா’ என்ற திரைப் படத்தில் ஹீரோவாக நடித்தவர் நடிகர் ரியோராஜ். இவர் தற்போது பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவர் என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன

இந்த நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர்தான் நடிகர் ரியோ ராஜ்க்கு குழந்தை பிறந்ததும் என்பதும் குழந்தையின் பெயர் ‘ரதி’ என்று சமீபத்தில் தனது சமூக வலைத்தளத்தில் ரியோ ராஜ் அறிவித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.