தன்னுடைய ரிலீஸ் படத்தை கூட பார்க்காமல் விஜய்யின் 'சச்சின் ' படம் பார்த்த நடிகர்.. வேற லெவலில் குவியும் வாழ்த்து..!


Send us your feedback to audioarticles@vaarta.com


தமிழ் ஹீரோ ஒருவரின் திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், அந்த ஹீரோ தன்னுடைய படத்தை கூட தியேட்டரில் சென்று பார்க்காமல், விஜய் நடித்த சச்சின் ரீ-ரிலீஸ் ஆன நிலையில் அந்த படத்தை பார்க்க வந்திருப்பதாக சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். இதனை அடுத்து, விஜய் ரசிகர்கள் அவருக்கு வேற லெவலில் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
விஜய் நடித்த ’சச்சின்’ திரைப்படம் 20 ஆண்டுகளுக்கு பிறகு இன்று ரீ-ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், முதல் நாளே ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக பல திரையரங்குகளில் விஜய் ரசிகர்கள் இந்த படத்தை கொண்டாடி வருகின்றனர் என்பது குறிப்பிடப்படுகிறது.
ரசிகர்கள் மட்டுமின்றி, திரையுலக பிரபலங்களும் இன்றைய முதல் நாள் முதல் காட்சியை பார்த்து, தங்களது சமூக வலைதளங்களில் இந்த படத்தைப் பற்றி மலரும் நினைவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
அந்த வகையில், சிபி சத்யராஜ் நடித்த ’டென் ஹவர்ஸ்’ என்ற திரைப்படம் இன்று வெளியாகி இருக்கும் நிலையில், தன்னுடைய படத்தின் ‘ரெஸ்பான்ஸ் எப்படி இருக்கு’ என்பதை கூட திரையரங்கிற்கு சென்று பார்க்காமல், விஜய் நடித்த ’சச்சின்’ திரைப்படத்தை பார்க்க திரையரங்குக்கு வந்துள்ளார். இதனை அடுத்து, விஜய் ரசிகர்கள் அவருக்கு தங்களது நன்றியையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.
Showtime😍#Sachin@actorvijay @theVcreations pic.twitter.com/nEkRyPAyOR
— Sibi Sathyaraj (@Sibi_Sathyaraj) April 18, 2025
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments